ஆதார் கார்டு.. மீணடும் வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு.. இதை செய்தாலே போதும்.. ஆதார் அட்டை செயலிழக்காது
சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிக்க, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரையில், மீண்டும் கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த முக்கிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பான் கார்டு: இதனிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவுசெய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்..
புதுப்பிப்பு: அதனால்தான், ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன்-11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பிறகு, செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் ஒருமுறை அவகாசமும் தரப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வற்கான கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆதாரை புதுப்பிப்பது எதற்காகவென்றால், ஒருவரின் பெயரில் இரண்டு, மூன்று ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.. அதனால்தான், அவ்வாறான முறைகேடுகளை தடுப்பதற்காக, ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது...
ஆதார் விவரங்கள்: அதுமட்டுமல்ல, சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஒரு தன்னுடைய செல்போன் நம்பர், இமெயில், அட்ரஸ் போன்றவற்றை மாற்றி இருக்கலாம்... அத்துடன், குழந்தைகளின் ஆதார் விபரங்களை அப்டேட் செய்வதற்கு விதிமுறைகளையும் அரசு விதித்துள்ளது. எனவே, ஒரு குழந்தை 15 வயதை தாண்டியவுடனேயே, அவரது அனைத்து பயோமெட்ரிக்களும் அப்டேட் செய்யப்பட வேண்டும்.
மேலும், தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டுகளை நீக்கவும் இந்த நடைமுறை உதவுகிறது. எனவே, ஆதாரை புதுப்பிப்பது அவசியமாகிறது.. myAadhaar மட்டுமே இலவச சேவையை வழங்குகிறது. இருந்தாலும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் செல்ல விரும்பினால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி புதுப்பிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினாலே போதும்:
- https://myaadhaar.uidai.gov.in/-ல் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை அணுகவும்.
- மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு, "உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி எண் வரும்..
- அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்தவுடன் "புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு" என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது மாற்றங்களை செய்ய "முகவரி" விருப்பத்தை பயன்படுத்தவேண்டும். புதிய முகவரிக்கான தகவலையும் பதிவிட வேண்டும். அது இப்போது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
- கட்டணப் பக்கத்தில் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பிறகு, SAVE செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
-பிறகு URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக்கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications