மின்வாரியம் மட்டுமல்ல..தமிழக அரசின் மானியங்கள்..சேவைகளை பெற ஆதார் கட்டாயம்..அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும் என தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்களுக்கும் ஆதார் ஒதுக்கப்படும் வரை அரசின் பலனகள் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

ஆதார் தனி மனிதனின் அடையாளம் மட்டுமல்ல அரசின் மானியங்களை பெற மத்திய மாநில அரசுகள் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளன. மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 84 திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி இணைப்பு, பொது விநியோகதிட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா வின் கீழ் திறன் வளர்ப்பு பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அவசியம் என்பது என நடைமுறையில் உள்ளது.

Aadhaar is mandatory to get Tamil Nadu government subsidies services says Tamil Nadu government

அடிப்படை கல்வி மற்றும் இடைநிலை கல்வித்துறை வரை ஆதார் என் அவசியம் என்று அறிவித்துள்ளது. சர்வ சிக்‌ஷ அபியான் திட்டத்தின் கீழ் மதிய மதிய உணவு உண்ணும் பிள்ளைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
தேசிய மருத்துவ அமைச்சகமும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது. தேசிய அளவிலான மருத்துவ திட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி தொகைகளை பெறவும் ஆதார் அவசியமாக்கியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இரண்டு திட்டங்களில் உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம். ஸ்வதார் கிரே திட்டத்தில், பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மறு நிவாரணமளிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மின் இணைப்பு உடன் ஆதார் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண்ணை அடையாளமாக தர வேண்டும் என நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புகள் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இ.பி. மட்டுமல்ல, தமிழகத்தில் 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும் என தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று, பின்னர், இளங்கலை, பட்டயப்படிப்புப்பு என உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

உதவித் திட்டங்களில் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை, இதர பெண்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்க காசு பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச விலை அடிப்படையில், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் 53 வகையான மத்திய, மாநில அரசின் விவசாய உதவித் திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடை கால உதவித்தொகை உள்ளிட்ட 21 வகையான நலத்திட்டங்களைப் பெற மீனவர்களுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் 73 வகையான நலத்திட்டங்களும் மூலம் அளிக்கப்படும் உதவிகளைப் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரியம் மட்டுமல்ல பல துறைகளில் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் கட்டயம். ஆதார் இல்லாதவர்களுக்கும் ஆதார் ஒதுக்கப்படும் வரை அரசின் பலனகள் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+