Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் இருந்து மாறிய ஆதார் சேவை மையம்.. தமிழ்நாட்டில் 30 இடங்களில் புதிய மையங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செப்டம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் 30 ஆதார் சேவை மையங்கள் திறக்கப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரி தினகரன் கூறினார். கோயம்பேட்டில் ஆதார் சேவை மையம் செயல்பாட்டில் இல்லை.. அங்கிருந்து, அண்ணாநகர் கிழக்கு, 3-வது அவென்யூவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் அமைப்பு செயல்படும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சென்னையைச் சேர்ந்தவர்கள் இனி கோயம்பேட்டிற்கு பதில் அண்ணா நகர் செல்வது நல்லது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) சார்பில் சென்னை, கோயம்பேட்டில் ஆதார் சேவை மையம் செயல்பாட்டில் இருக்கிறது. கோயம்பேட்டில் இடபற்றாக்குறை காரணமாக தற்போது, அண்ணாநகர் கிழக்கு, 3-வது அவென்யூவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் அமைப்பு செயல்படும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. முறைப்படி ஆதார் சேவை மைய திறப்பு விழா நேற்று நடந்தது.

Aadhaar service center shifted from Koyambedu new centers opened in 30 locations in Tamil Nadu

தமிழக அரசின் இ-சேவை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு அதிகாரி அபூர்வா சவுத்ரி முன்னிலை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் துணை இயக்குனர் ஆனிஜாய்ஸ் கூறுகையில், 'தமிழகத்தில் ஆணையம் சார்பில் 30 நகரங்களில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் இதுபோன்று புதிதாக ஆதார் சேவை மையம் தொடங்கப்பட இருக்கிறது. அதில் முதல் கட்டமாக வருகிற மார்ச் மாதத்திற்கு முன்பாக 8 நகரங்களில் ஆதார் சேவை மையம் திறக்கப்படும்' என்று கூறனார்.

இந்த ஆதார் சேவை மையம் தினசரி காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5.30 மணி வரை செயல்படும். தினசரி நேரில் மற்றும் ஆன்-லைன் மூலம் தலா 500 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. சேவைக்காக 20 கவுண்ட்டர்கள் செயல்படும் என்று மாநில இந்திய தனித்துவ அடையாள தலைமை அதிகாரி தினகரன் கூறினார்.

30 புதிய ஆதார் மையங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் 30 புதிய ஆதார் மையங்களும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மற்றும் ஆதார் சேவை தேவைப்படும் முக்கியமான நகரங்களில் அமைக்கப்பட உள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள மையங்களுடன் சேர்த்து, கூடுதல் இடங்களாக தாம்பரம், அம்பத்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளில் புதிய மையங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

கோவை & மதுரையில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கோவையை பொறுத்தவரை துடியலூர் மற்றும் பொள்ளாச்சியில் கூடுதல் மையங்கள் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

திருச்சி & சேலம் பகுதியை பொறுத்தவரை மாவட்டத்தின் மையப் பகுதிகளில் பிரத்யேக சேவை மையங்கள் அமைய இருக்கிறது. சென்னை, கோவை, மதுரையில் உள்ளது போல் தனி ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல் ஈரோடு, திருப்பூர், வேலூர் போன்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களை இலக்காகக் கொண்டும் தனி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த 30 இடங்களும் தலைமை தபால் நிலையங்கள் அருகில் அமைய வாய்பபு உள்ளது. பல தபால் நிலையங்களில் ஏற்கனவே உள்ள ஆதார் பிரிவுகள், முழுமையான 'சேவை மையங்களாக' தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் பெரிய பொதுத்துறை வங்கிகளின் வளாகங்களில் இந்த மையங்கள் செயல்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் சில இடங்களில் பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகங்கள் இந்த மையங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

வழக்கமான இ-சேவை மையங்களை விட, இந்த 'ஆதார் சேவை மையங்கள்' அதிக வசதிகள் இருக்கும்.இங்கு ஆன்லைனில் நேரம் ஒதுக்கிவிட்டுச் சென்றால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. முன்பதிவு செய்துவிட்டு சென்றால், சில நிமிடங்களில் வேலை முடிந்துவிடும். புதிய ஆதார் பதிவு, கைரேகை/கண் கருவிழி மாற்றம் , பெயர்/முகவரி மாற்றம் என அனைத்தும் ஒரே இடத்தில் நடக்கும் என்பதால் அலைய வேண்டியதிருக்காது. இந்த புதிய மையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதிகள் இருக்கும்.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்குள் மாநில அரசால் 690 ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+