ஆதார் அட்டை உங்ககிட்ட இருக்குல்ல? இதோ முக்கிய தகவல்.. இதை இப்பவே முடிச்சிடுங்க.. டைம் வேற நெருங்குது
சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிக்க, ஜூன் 11 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் மீண்டும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பான் கார்டு: இதனிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவுசெய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்..
புதுப்பிப்பு: அதனால்தான், ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன்-11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது எதற்காகவென்றால், ஒருவரின் பெயரில் இரண்டு, மூன்று ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.. அதனால்தான், அவ்வாறான முறைகேடுகளை தடுப்பதற்காக, ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது... மேலும், தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டுகளை நீக்கவும் இந்த நடைமுறை உதவுகிறது.
myAadhaar மட்டுமே இலவச சேவையை வழங்குகிறது. இருந்தாலும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் செல்ல விரும்பினால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி புதுப்பிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினாலே போதும்:

- https://myaadhaar.uidai.gov.in/-ல் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை அணுகவும்.
- மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு, "உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி எண் வரும்..
- அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்தவுடன் "புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு" என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது மாற்றங்களை செய்ய "முகவரி" விருப்பத்தை பயன்படுத்தவேண்டும். புதிய முகவரிக்கான தகவலையும் பதிவிட வேண்டும். அது இப்போது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
- கட்டணப் பக்கத்தில் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பிறகு, SAVE செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
-பிறகு URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக்கொள்ளலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications