ஆதார் கார்டு நம்பரே ஆதாரம்.. தமிழக அரசு அறிவிப்பு.. "இது" இருந்தால்தான் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்
சென்னை: மகளிர் உரிமைத்தொகையை பெற வேண்டுமானால் ஆதார் அட்டை மிகவும் அவசியம்.. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு என்பது வெறும் அட்டை இல்லை.. அது ஒவ்வொருவரின் அடையாளம் ஆகும்.. இந்த ஆதார் கார்டு இருந்தால்தான், நம்மால் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியும்..
தனிநபரின் பெயர், போட்டோ, பிறந்ததேதி, செல்போன் நம்பர், வீட்டு அட்ரஸ், இமெயில் அட்ரஸ், பயோமெட்ரிக், இப்படி பல்வேறு விவரங்கள் அந்த கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

நலத்திட்டங்கள்: இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்படும்... ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களையும், சேவைகளையும் பெற முடியும்..
கைக்குழந்தைகள் உட்பட எந்த ஒரு வயதினரும் ஆதார் அட்டை பெறலாம். குழந்தைகள் 5 வயதை எட்டிவிட்டால், அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் போனால், பால பருவத்தில் செய்யப்பட்ட ஆதார் அட்டை செல்லாமல் போய்விடும். அதேபோல, கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கண் பார்வையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ இழந்தவர்கள் கூட, ஆதார் கார்டை பெற பதிவு செய்ய முடியும்.
போட்டோ: குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உரிய சான்று ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட ஆதாருக்குப் பதியலாம். இந்த ஆதார் கார்டில் உங்கள் போட்டோ பிடிக்கவில்லையானால் மாற்றிக் கொள்ளலாம்.. திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டு தொலைந்து போய்விட்டால், அதை மறுபடியும் மீட்டுக் கொள்ளலாம். இப்படி ஏகப்பட்ட வசதிகளை ஆன்லைனிலேயே நாம் செய்து கொள்ளும் வகையில் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு, பயனாளிகளுக்கு ஆதார் நம்பர் மிகவும் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் கார்டு: இந்த துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறவும், குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஆதார் எண் அவசியம். என்றும், ஆதார் எண் இல்லாத பயனாளிகள் விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆதார் எண் வரும் வரை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 10 ஆவணங்களை, அடையாள சான்றாக அளிக்கலாம் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications