இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் விசிகவுக்கு குறைவாக தொகுதிகள் ஒதுக்குவது குறித்து திருமாவளவன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது திமுகவின் பண்ணையார்தனம் என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "திருமாவளவன் அண்ணன் மீது எனக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று அன்றைக்கே சொன்னேன். அவர்களை நம்பாதீர்கள் அண்ணே என திருமாவிடம் கூறினேன். அப்படி சொன்னதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினார்கள். அதை விடுங்கள். பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவை காப்பாற்றி வந்தோம்.

திமுக மீதுதான் திருமா விமர்சனம்
எப்போதுமே முதலமைச்சர் நாம் எல்லாம் சீட்டு கூட்டணி இல்லை, கொள்ளைக்கான கூட்டணி என்பார். ஏன் கொள்கைக்காக இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க கூடாதா. திருமா அண்ணன் மிகுந்த வலியோடு ஒரு வீடியோ வெளியிடுகிறார். வளரக்கூடாது என நினைக்கிறார்கள். போராடி தொகுதிகளை பெற வேண்டும். நெருக்கடிகளுக்கு இடையே போராடி வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த அரசியல் சூழ்நிலை நமக்கு சாதகமாக இல்லை. நாம் வலிமை பெறக் கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம் என்று சொல்லியுள்ளார். அப்படியென்றால் திமுகவை பார்த்துதான் அவர் இப்படி சொல்கிறார். கடந்த 5 வருடங்களில் எவ்வளவு கொடுமைகளை இவர்கள் அனுபவித்திருப்பார்கள். கடைசியாக 5-6 தொகுதிகளுக்கு மேல் கிடையாது. இருந்தால் இருங்கள்.. இல்லையென்றால் செல்லுங்கள் என்கிறார்கள்.
கண்ணீர் தான் விடவில்லை
நாம் வளர வேண்டும் என்று வாழ்த்தவோ, ஊக்கப்படுத்தவோ இங்கு யாரும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை என்று திருமா அண்ணன் கூறியுள்ளார். எவ்வளவு மன வேதனையோடு இதை பேசியிருப்பார். அவர் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லையா. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித் சகோதரர்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்துள்ளன. எல்லாவற்றிலும் திமுகவுக்கு நண்பராக நின்றார்.
25 சதவீதம் தலித் சகோதரர்கள் உள்ளனர். அவர்களின் முகமாக அண்ணன் இருக்கிறார். அவருக்கு 6 சீட் கொடுத்து இருந்தால் இருங்கள்.. இல்லையென்றால் போங்கள் என்கிறார்கள். இதுதான் அட்ராசிட்டி திமுக பண்ணையார்தனத்தில் இருந்து மாறவே இல்லை. 2011 தேர்தலில் கருணாநிதி விசிகவுக்கு 10 தொகுதிகள் கொடுத்தார். இன்றைக்கு 6 தொகுதிக்கு மேல் கொடுக்க கூடாது என பண்ணையார் தனம் செய்கிறார்கள்.
பண்ணையார்தனம்
கூட இருந்தே ஏமாற்றுவதுதான் திமுகவின் வழக்கம். எப்படி வைகோவை முடித்தார்களா, அதேபோல நாளைக்கு விசிகவை முடிக்க தயாராகிவிட்டார்கள். தேர்தல் முடிந்தவுடன் இதை திமுகவே செய்யும். விசிகவுக்கு தவெக எதிரி இல்லை. உங்கள் வலி. எங்களின் வலி. எங்கு அதிக்கம் இருக்கிறதோ எங்கள் தலைவர் அதை எதிர்த்து நிற்பார்.
பாஜகவுடன் பேசிக் கொண்டிருந்தால் ஜனநாயகன் படம் அன்றைக்கே வெளியாகியிருக்கும். அப்போதே ரூ.1,500 கோடி சம்பாதித்திருக்கும். யார் மிரட்டுகிறார்களோ அவர்கள்தான் பயப்படுவார்கள் என்று அர்த்தம். யார் அமைதியாக இருக்கிறார்களோ அவர்கள் தான் தைரியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் தான் எங்கள் தலைவர் அமைதியாக இருக்கிறார்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications