செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) பற்ற வைத்துள்ள நெருப்பு, இப்போது கட்சிக்குள்ளேயே புகைச்சலை கிளப்பத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, கொங்கு மண்டல தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் எடுக்கப்போகும் ஒரு முடிவு, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல் டூ ஹோம்: தளபதியின் 'கொங்கு' ரூட்!
வழக்கமாக விஜய் எங்கு பிரச்சாரத்திற்குச் சென்றாலும், தனிப்பட்ட, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காகத் தரமான ஹோட்டல்களிலேயே தங்குவது வழக்கம். ஆனால், வரும் கொங்கு மண்டலப் பிரச்சாரத்தின் போது, ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தில் விஜய் தங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக-வில் இணைந்த சீனியர் புள்ளியான செங்கோட்டையன், விஜய்க்குத் தனது இல்லத்திலேயே சகல வசதிகளையும் செய்து தர முன்வந்துள்ளார். மூத்தவர், முக்கிய தலைவர் என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கட்சியின் மற்ற டாப் லெவல் தலைவர்களுக்கு இது கசப்பைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
அப்செட்டில் ஆதவ் அர்ஜுனா?
கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவரான ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் இதர மூத்த நிர்வாகிகள் இந்த முடிவால் அப்செட்டில் இருப்பதாக விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
அவர்களின் ஆதங்கம் என்ன?
பாகுபாடு: மற்ற மாவட்டங்களில் தங்கும் போது ஹோட்டல்களைத் தேர்ந்தெடுக்கும் விஜய், செங்கோட்டையன் வீட்டிற்கு மட்டும் ஏன் இந்த 'ஸ்பெஷல் விசிட்'? இது மற்ற சீனியர் நிர்வாகிகளிடையே "நாம் இரண்டாம் தரமா?" என்கிற கேள்வியை எழுப்பியுள்ளதாம்.
அதிகாரம்: செங்கோட்டையன் போன்ற பழைய அரசியல் ஜாம்பவான்களுக்கு விஜய் அதிக முக்கியத்துவம் தருவது, கட்சியை ஆரம்பகாலத்திலிருந்து கட்டமைத்தவர்களுக்கு ஒருவித பாதுகாப்பற்ற உணர்வைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ஸ்டாலின் எல்லாம் தொண்டர்கள் வீட்டிற்கு செல்கிறார். அவர்களின் திருமணங்களுக்கு செல்கிறார். ஆனால் விஜய் அப்படி செய்வது இல்லை. குறைந்தது பிரச்சாரத்தின் போதாவது செல்லலாம். அதைக்கூட செய்யவில்லை என்றால் எதற்கு கட்சி? என்று கேட்க தொடங்கி விட்டார்களாம்.
புரோட்டோகால்: ஒரு கட்சியின் தலைவர் குறிப்பிட்ட ஒரு வேட்பாளரின் வீட்டில் தங்குவது, அந்தத் தொகுதியில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கு இடையே தேவையில்லாத ஈகோவை வளர்க்கும் என்பது மூத்தவர்களின் வாதம்.
குள்ளம்பாளையத்தில் நடப்பது என்ன?
"செங்கோட்டையன் அண்ணன் கட்சிக்கு வந்தது பெரிய பலம் தான். ஆனால், அவருக்காக மொத்தக் கட்சியும் வளைந்து கொடுப்பது போன்ற பிம்பம் உருவாகிவிடக்கூடாது," என தவெக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் பேச்சுகள் ஓடுகின்றன.
மறுபுறம், செங்கோட்டையன் தரப்போ, "விஜய் தங்குவது எங்களுக்குப் பெருமை. அவர் எங்க வீட்டுப் பிள்ளை போல வரப்போகிறார், இதில் அரசியல் எதற்கு?" என கூலாகக் கடந்து போகிறார்கள்.
விஜய்யைப் பொறுத்தவரை இது ஒரு 'சென்டிமென்ட்' முடிவாக இருக்கலாம். கொங்கு மண்டலத்தைக் கோட்டையாக மாற்ற, அங்கிருக்கும் அனுபவமிக்கத் தலைவருக்கு மரியாதை தருவதாக அவர் நினைக்கலாம். ஆனால், 'ஜனநாயக ரீதியான கட்சி' என தவெக-வை அடையாளப்படுத்தத் துடிக்கும் ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுக்கு, இது தனிநபர் ஆதிக்கம் போலத் தெரிகிறது.
இந்த விவகாரம், தேர்தல் நேரத்தில் தவெக-வுக்குள் ஒரு பெரிய மோதலாக வெடிக்குமா அல்லது விஜய் இதைச் சமரசம் செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications