ஆதவ் அர்ஜுனாவிடம் பணமே இல்லையா.. அப்போ இது என்னாது? புஸ்ஸி ஆனந்த் பேச்சை கிண்டல் செய்யும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ரூ.342 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருக்கும் சூழலில், அவரிடம் பணமே இல்லை என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசி இருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவிடம் ஒன்றுமே இல்லை என்றும், அதனை யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ள கருத்துக்கள் தவெகவினர் மத்தியிலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக இடைத்தேர்தல் பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய கருத்துக்கள் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. ஆதவ் அர்ஜுனா குறித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் பணமே இல்லை.. அவரிடம் காசே இல்லையென்றால், யாருமே நம்ப மாட்டார்கள்.

Aadhav Arjuna

தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைந்த பின் தொழில்களை குடும்பத்தினருடன் கொடுத்துவிட்டார். அவரிடம் ஒன்றுமே இல்லை.. அமைச்சர் பதவி மட்டுமே இருக்கிறது. அதனை வைத்தே காலத்தை ஓட்ட வேண்டும் என்று தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனாவிடம் பணமே இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் பேசி இருப்பது தவெகவினர் மத்தியிலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

ஏனென்றால் ஆதவ் அர்ஜுனா அவரின் சொந்த இணைய பக்கத்தில் ரூ.534 கோடி இருப்பதாக கூறி இருக்கிறார். அதேபோல் தேர்தல் பிரமாண பத்திரத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் ரூ.342 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தவெகவில் விஜய்க்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் இருக்கும் பிரமுகர் என்றால் அது ஆதவ் அர்ஜுனா தான்.

கடந்த 5 ஆண்டுகளில் மொத்த வருமானம் ரூ.67.57 கோடி என்றும், அதே காலக்கட்டத்தில் மனைவி டெய்சிக்கு ரூ.38 கோடி வருமானம் இருந்தது என்றும் கூறி இருந்தார். தனது பெயரில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.180 கோடி என்றும், மனைவி பெயாரில் இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.162 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அசையா சொத்தாக தனது பெயரில் ரூ.17.49 கோடியும், மனைவி பெயரில் அசையா சொத்தாக ரூ.89 லட்சமும் இருப்பதாக கூறியுள்ளார். வங்கி கணக்கில் ரூ.17.53 கோடி இருப்பும், முதலீடாக ரூ.2.23 கோடி மதிப்பிலான பங்குகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சென்னையில் உத்தண்டி மற்றும் போர்ட் கிளப் பகுதியில் ரூ.17.49 கோடி மதிப்பிலான இரண்டு அபார்ட்மெண்ட் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.20.50 லட்சம் மதிப்பிலான 2 கார்கள், ரூ.1.12 லட்சம் மதிப்பிலான புல்லட் பைக் இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரூ.63,000 மதிப்புள்ள ஒரு சைக்கிள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மனைவி பெயரில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, கோவை, கேரளாவில் ரூ.37.345 கோடி மதிப்பிலான 57 ஏக்கர் நிலம், மனைவியின் பெயரில் 5 வணிக வளாகங்கள் ரூ.33.27 கோடி என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து ரூ.2.29 கோடி மதிப்பிலான 1.691 கிலோ தங்கமும், மனைவியிடம் ரூ.3.01 கோடி மதிப்பிலான 2.225 கிலோ தங்கமும், ரூ60. 27 லட்சம் மதிப்பிலான 2.41 கிலோ வெள்ளியும், ரூ.6.16 கோடி மதிப்பிலான வைரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வளவு சொத்துக்களை வைத்த்யுள்ள ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரின் மனைவியிடம் பணமே இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் பேசியதை, கொஞ்சம் அளந்து பேசுங்கள் என்று தவெகவினரே கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+