காலை 8.15 மணிக்கு டாய்லெட்டுக்குள் சென்ற உதயநிதி! 10.15 மணி வரை.. Toilet புரட்சியாளர்! ஆதவ் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை 8.15 மணி முதல் 10.15 மணி வரை, அதாவது 2 மணி நேரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை டாய்லெட்டுக்குள் உட்கார வைத்த சம்பவத்தை அவர் தன் வாழ்க்கையில் மறக்கவே மாட்டார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் பனையூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் பேசியதாவது: சட்டசபைக்குள் மரபை இன்று வரைக்கும் உண்மையா கடைபிடிச்சிட்டு இருக்க கூடிய இயக்கம் தமிழக வெற்றி கழகம். நமக்கு அனுபவம் இல்லைன்னு சொன்னாங்க, சட்டசபை எதிர்கொள்ள முடியுமான்னு கேட்டாங்க.

aadhav arjuna udhayanidhi stalin

தமிழகத்தில் 60 வருட அரசியலை மாற்றி அமைத்து இருக்கிறோம். 80 நாள்களாக தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதனை முக ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

கொளத்தூருக்கு ஒரே முறை தான் விஜய் சென்றார். அதுக்கே இப்படி, சேப்பாக்கம் செல்லாமல் விட்டுவிட்டார். இனிமேல் திமுக குடும்பத்தில் யாரும் முதலமைச்சர் ஆக முடியாது.

"வாயை திறங்க சி எம்" என்று பேட்ச் குத்திட்டு வந்தார்கள். விஜய் எழுந்து பேச ஆரம்பித்ததும் ஓடிவிட்டார்கள். திமுக தோல்விக்கு ஆதிக்க மனது தான் காரணம். வேட்பாளராக இருக்கும் போது எங்கள் எம்எல்ஏவை வாங்க முடியவில்லை. ஆனால் எம்எல்ஏ ஆன பிறகு வாங்க முயற்சி நடக்கிறது.

கடலில் இருந்து மீனை தரையில் எடுத்து போட்டால் துள்ளும், அதுபோல திமுக 6 மாதம் துள்ளும். உதயநிதியை துணை முதல்வர் ஆக்கி ஒரு பட்டாபிஷேகம் நடந்தது‌. எதிர்கட்சி தலைவராகியுள்ளார்.

இப்பொழுது சேப்பாக்கம் தொகுதியில் மறுத்தேர்தல் நடத்தினால் உதயநிதி ஸ்டாலின் டெபாசிட் இழப்பார். போட்டியிட அவருக்கு தைரியம் இருக்கிறதா அவருக்கு!

திமுக ஆர்ப்பாட்டத்தில் தான் எதுவுமே தவறாக பேசவில்லை என உதயநிதி மறுக்கிறார். அந்த வார்த்தையை அவரது தாய், மகள் முன்பு இப்படி பேச முடியுமா?

ஒரு‌ பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இடத்தில் இருந்து கொண்டு இப்படி பேசுவதா? காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் சட்டப்படி வழிமுறைகளை நடந்து வருகிறார்.

காவிரி பிரச்சனையை வைத்து இரு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் கர்நாடக செல்ல முதலமைச்சர் விஜய் முடிவு செய்தார். சகோதரத்துவத்தை வளர்க்க தான் முதலமைச்சர் அங்கு செல்ல முடிவு செய்தார்.

ஆட்சியே கவிழ்த்தாலும் பரவாயில்லை. மூன்று மாதத்தில் தேர்தல் வரும்.‌ 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். ஏன் பயப்பட வேண்டும் என விஜய் கேட்கிறார். யார் எல்லாம் பெண்ணை தவறாக பேசுகிறார்கள் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்..

உதயநிதியை புரட்சியாளராக மாற்ற முயற்சி நடக்கிறது. கரூர் சம்பவத்தில் திமுக ஆட்சியின் போது நான் வீட்டில் தான் இருக்கிறேன் வாங்க, ஆனால் என் கட்சியினர் மீது கை வைக்கக் கூடாது என்று விஜய் சொன்னார்.

ஆனால் உதயநிதியை கைது செய்ய காவல் துறை வீட்டிற்கு சென்றபோது, காலை 8.15 க்கு டாய்லெட் சென்றவர், 10.15 மணி வரை டெய்லெட் விட்டு வரவில்லை. டாய்லெட்டில் 2 மணி நேரம் உட்கார வைத்துவிட்டார்கள். வாழ்வில் இதனை உதயநிதி மறக்கவே மாட்டார். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+