ஆதவ் அர்ஜுனாவை சேர்த்துக்கலாம்! ஆனால் பெரிய சிக்கல் ஒன்று இருக்கு! விஜய்க்கு நண்பர்கள் சொன்ன அறிவுரை
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அரசியல் ரீதியாக அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி நிலவி வருகிறது. அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவாரா என்ற கேள்வி நிலவி வருகிறது. நடிகர் விஜயிடம் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான சிலர் ஆலோசனை வழங்கி வருகிறார்களாம்.
கடந்த மாதம் 14ம் தேதி லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புடைய அவரது வீடு, அலுவலகங்களிலும், மார்ட்டினின் மருமகனும் சிறுத்தைகள் கட்சியில் து.பொ.செ.வுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் களமிறங்கி தீவிரமாக ரெய்டு நடத்தினர்.

அதிகாலையே அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களுக்கு சென்றனர். ஒரே நேரத்தில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இப்படிப்பட்ட நிலையில்தான் லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா எதிராக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கு பின்னணியில் திமுகவின் அழுத்தம் இருப்பதாகச் சொல்லப்பட்டது..
முக்கியமாக சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலேயே அமலாக்கத் துறை சார்பாக சோதனை நடத்தப்பட்டது.
விஜய் கட்சி; இப்படிப்பட்ட நிலையில்தான் எங்கே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. 6 மாதங்கள்தான் சஸ்பெண்ட் என்றாலும் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
விஜயுடன் நெருக்கம் என்பதை தாண்டி விஜய்க்கு பொருளாதார ரீதியாக சப்போர்ட் தேவை. அவர் சினிமாவில் சம்பாதித்த தொகையை வைத்து தேர்தலை சந்திக்க முடியாது. தேர்தல் நிதி தேவை. அதோடு தேர்தல் வியூகம் வகுக்க ஆட்கள் தேவை. இது அனைத்தும் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ளது. அவர் நிதி தொடர்பாகவும் சப்போர்ட் செய்ய முடியும்.. ஆலோசனை வழங்கவும் அவரிடம் நிறுவனம் உள்ளது. இதனால் விஜய் உடன் ஆதவ் அர்ஜுனா கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆலோசனை: ஆனால் விஜயிடம் அவருக்கு நெருக்கமான சிலர் ஆதவ் அர்ஜுனாவை சேர்க்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம். அவரை சேர்த்து நமக்கு பலம்தான். நமக்கு அரசியல் ரீதியா சப்போர்ட் கிடைக்கும். நமக்கு . தேர்தல் நிதி கிடைக்கும். ஆனால் நாம் ஊழலை எதிர்க்கிறோம். வாரிசு அரசியலை எதிர்க்கிறோம்.
ஆனால் அப்படி இருக்க.. நாம் அமலாக்கத்துறை புகாரில் உள்ள ஒருவரை எப்படி கட்சிக்குள் சேர்க்க முடியும். அமலாக்கத்துறை ரேடாரில் உள்ளவரை கட்சியில் சேர்ப்பது நமக்கே எதிராக திரும்பும். நாம் அதன்பின் ஊழலை எதிர்த்து என்ன பேச முடியும் என்று சிலர் ஆலோசனை வழங்கி உள்ளார்களாம். யோசித்து முடிவெடுங்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளார்களாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications