"பிரதருக்கு" காலையிலேயே பேரதிர்ச்சி! ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறாராம் ஆர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்புக்கு அவருடைய மனைவி ஆர்த்தி, ஆட்சேபம் தெரிவித்துள்ளதால் இந்த சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயம் ரவி விவாகரத்து குறித்து அறிவித்த போதிலிருந்தே ஆர்த்தி, ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார் என திரை விமர்சகர்கள் கூறி வந்தனர். ஜெயம் ரவி பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்த்தியின் மறுப்பு அறிவிப்பு அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. பொதுவாக விவாகரத்து என்பது பல்வேறு காரணங்களுக்காக கேட்கப்படுகிறது. விவாகரத்தை பொருத்தமட்டில் பெரிய இடங்களில் இருவருமே பரஸ்பரம் திருமணத்திலிருந்து விலகுவதை அறிவிப்பார்கள்.

jayam ravi aarthi

உதாரணமாக தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி உள்ளிட்ட ஜோடிகளில் 4 பேருமே தனித்தனியாக அறிவித்திருந்தார்கள். ஆனால் ஜெயம் ரவி விவகாரத்தில் ஆர்த்தி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

அதிலிருந்தே பலருக்கும் ஆர்த்திக்கு, ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக தெரிவித்திருந்தனர். தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ரவியுடனான போட்டோக்களை ஆர்த்தி நீக்கியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவர் இன்றைய போஸ்ட்டில் சொல்லியிருப்பது போல் தன் மீது தனக்கு நெருக்கமானவர்கள், குடும்ப நண்பர்களிடம் ரவி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கலாம்.

அந்த கோபத்தில் கூட ஆர்த்தி, புகைப்படங்களை நீக்கியிருக்கலாம். திருமணம் செய்யும் போது எப்படி பெரும்பாலான இடங்களில் ஆண், பெண் இருவரின் விருப்பத்தையும் கேட்டு அதற்கேற்ப திருமணங்கள் நடைபெறுகிறதோ அது போல்தான் விவாகரத்தும் கணவன், மனைவி பரஸ்பரம் சேர்ந்து இந்த முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்.

திரைத்துறையில் எத்தனையோ பேர் பரஸ்பரம் பிரிந்து விட்டு மறுமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அண்மைக்காலங்களில் முதல் முறையாக ஆர்த்திதான், ரவியின் விவாகரத்து அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது ஸ்டேட்மென்ட்டிலும் சரி, இன்ஸ்டா உள்ளிட்ட கணக்குகளிலும் சரி, ரவி என்ற பெயரை ஆர்த்தி எடுக்கவே இல்லை.

தன் மீது ரவி தவறான குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாகவும் அது குறித்து கணவரிடம் மனம் விட்டு பேச முயற்சித்ததாகவும் அதற்கு தனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் ஆர்த்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, அனைவரின் நலனுக்காகவும் எடுக்கப்பட்டது என ரவி கூறியதிலிருந்து ஆர்த்தி மாறுபடுகிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனுவையும் அளித்துள்ளார். இப்படியிருக்க இன்றைய தினம் ஆர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். அதிலும் இரு நாட்கள் கழித்து ஆர்த்தி மறுப்பு தெரிவிக்க என்ன காரணம் என திரை விமர்சகர்கள் சிலரிடம் கேட்ட போது ஜெயம் ரவி எதிர்பாராதவிதமாக அறிக்கையை வெளியிட்டிருந்தாலும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆர்த்தி தரப்பு முயற்சித்திருக்கும்.

தன் மீது தவறு இல்லை என்பதை ஆர்த்தி நிரூபித்திருந்தால், ஜெயம் ரவியின் அறிக்கை நீர்த்து போக வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால் ஆர்த்திக்கு ஜெயம் ரவி பிடி கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதனாலேயே தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என வெளிப்படுத்தவே ஆர்த்தி இன்று ரியாக்ட் செய்திருக்கிறார். மேலும் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் ஒரு சேர முடிவெடுத்தால் நலமாக இருக்கும்.

இல்லாவிட்டால் இது போன்ற சண்டைகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்துமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஒரு வேளை ஜெயம் ரவி விடாபிடியாக விவாகரத்தில் குறியாக இருந்தால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பதை தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞர்களுடனும் சேர்ந்து பேசி ஆர்த்தி முடிவெடுப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+