Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவின் பால்.. ஆவினில் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும்.. தமிழ்நாடு அரசின் புது அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் பாலில் தட்டுப்பாடுகள் நிலவுவதாக தகவல்கள் வெளிவரும்நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமுல் நிறுவனம் தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்து வருகிறது.. அமுல் என்பது, குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்..

அதாவது, பால் உற்பத்தி விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய, அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விளம்பர பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

தட்டுப்பாடு: தமிழகத்துக்குள் திடீரென, அமுல் வந்துவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்படும்... ஏற்கனவே ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வரும்நிலையில், அமுலின் வருகையானது, கிலியை தந்து வருகிறது..

aavin: aavin milk company is not operating at a loss, says DMK minister mano thangaraj

மேலும், ஆவினில், அமுல் நிறுவனத்தின் தலையீடும் அதிகரிக்கலாம் என்றும் கலக்கம் சூழ்ந்து வருகிறது.. எனவேதான் இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. இது தொடர்பாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றன.. அமுல் நிர்ணயம் செய்துள்ள விலையை காட்டிலும் ஆவின் நிறுவனம் கூடுதல் விலைக்கு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அமித்ஷாவுக்கு கடிதம்: அதற்கேற்றவாறு, தமிழக முதல்வர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.. தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியிருந்தார்..

அதேபோல, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, அமுல் வந்தாலும், ஆவினுக்கு பாதிப்பு ஏற்படாது, ஆவின் சமாளிக்கும் என்று கூறியிருந்தார்.. இதனிடையே, தமிழகத்தில் திடீரென பால் தட்டுப்பாடு விவகாரம் எதிரொலித்தது.. 3 நாட்கள் ஆகியும் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.

தட்டுப்பாடுகள்: இதற்கு அமைச்சர் மீண்டும் ஒரு விளக்கம் தந்திருந்தார்.. அதில், "பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம்.. ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது.. அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

ஆனாலும், ஆவின் பால் வழங்கல் பாதிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இதற்கு மீண்டும் விளக்கம் தந்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்..

"தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்பதே இல்லை. தமிழகத்தில் ஆவின் சிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்குத் தேவையான பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பால் கொள்முதலும் அதிகரிக்கப்படும். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை.

பாலகங்கள்: ஆவினைப் பொறுத்தவரை 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதை இந்த ஆண்டில் 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளோம். பள்ளிக்கூடங்களிலும், தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+