Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி லட்டு விவகாரம்.. ஆவின் கொடுத்த குட் நியூஸ்.. அதிகாரிகள் போடும் புது திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருப்பதி லட்டுகளை தயாரிக்க ஆவின் நெய் விநியோகம் செய்வது குறித்து முடிவு எடுக்கவுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஏழுமலையானின் அருள் பெற்ற புண்ணிய பிரசாதமாக திருப்பதி லட்டு கருதப்படும் நிலையில் இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

tirupati laddu aavin

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். ஆனால், ஜகன்மோகன் கட்சியினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக பொதுவெளியில் பகிரங்கமாக கூறியிருப்பது தவறானது. இது மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு ஆந்திரா மாநில அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுப்பிரமணியன் சுவாமி எப்படி மனுத் தாக்கல் செய்ய முடியும. யார் எனுமதி தந்தது என ஆந்திரா அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டது.

கலப்பட நெய்யில்தான் லட்டுகள் தயாரிக்கப்பட்டன என்பதற்கான உறுதியான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. இது பல கோடி பக்தர்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் எல்லாம் அரசியல் செய்யக் கூடாது என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் விநியோகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்கலான திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலமாகவே நெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான உயர்தரமான, சுவையுடைய நெய்யை ஆவின் நிறுவனமே விநியோகம் செய்து வந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நெய் மிகவும் குறைந்த விலைக்கு கேட்கப்பட்டதால் ஆவின் நிறுவனம் சார்பில் நெய் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உயா்தர நெய்யை திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விநியோகம் செய்வதற்கு தயாராக உள்ளது. நெய்யிற்கான உரிய விலை அளித்து வாங்க திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக் கொண்டால், ஆவின் சார்பில் மீண்டும் நெய் விநியோகம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+