நெய் பாதுஷா.. நட்டி அல்வா.. மைசூர்பாகு! ஆவின் வழங்கும் தீபாவளி காம்போ ஆஃபர்! எங்கும் கிடைக்காத விலை!
சென்னை: தீபாவாளி பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் இப்போதே இனிப்புக் கடைகளில் ஆர்டர்கள் பெறப்பட்டு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
தனியார் இனிப்புக் கடைகளுக்கு போட்டியாக ஆவின் பால் நிறுவனமும் இந்தாண்டு தீபாவளிக்கு சூப்பர் காம்போ பேக்குகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் காம்போ 'ஏ'வில் மைசூர் பாகு கால் கிலோ, மிக்சர் 200 கிராம், குக்கீஸ் 2, சாக்லேட் ஆகியவைகளை அடங்கிய பேக் ரூ.300க்கும், காம்பீ 'பி'யில் நெய் பாதுஷா கால்கிலோ, பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 200 கிராம், மிக்சர் 200 கிராம், சாக்லேட் ஆகிய இனிப்பு, கார வகைகள் அடங்கிய பேக் ரூ.500க்கும் விற்பனை செயப்படுகிறது. காம்போ 'சி'யில் காஜு பிஸ்தா ரோல் கால் கிலோ, காஜு கத்லி கால் கிலோ, நெய் பாதுஷா கால் கிலோ, நட்டி அல்வா கால் கிலோ என 1 கிலோ இனிப்பு ரூ.900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காஜூ பிஸ்தா ரோல் , காஜு கத்லி ஆகிய இரண்டு வகை இனிப்புகளும் முந்திரியிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்படுவதால் இந்த இனிப்புகள் அடங்கிய தொகுப்பு பேக்குகள் மட்டும் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே ஆவின் பொது மேலாளர்கள் கூட்டத்தை நடத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவினில் தீபாவளிக்கு தயார் செய்யப்பட்டுள்ள சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அனைத்து ஒன்றியங்களிலும் இந்த சிறப்பு இனிப்பு வகைகள் அனைவருக்கும் கிடைக்க அறிவுறுத்தினார்.

தீபாவளியை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் அனைத்து வகையான ஆவின் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். ஆவின் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் புதிய ஆவின் பாலகங்கள் துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், நகரங்கள் தோறும் புதிய முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்யவும் அமைச்சர் மனோ தங்கராக் அறிவுரை வழங்கினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications