முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி... தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் விலை குறைப்பு
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி இன்று முதல் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ந் தேதி 5 முக்கியமான அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை குறைப்பும் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் ஆவின் பால் விலை குறைப்பானது இன்று முதல் (மே 16) நடைமுறைக்கு வரும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழக தற்போது ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்பனையாகிறது.

ஆவின் பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.37, அரை லிட்டர் ரூ.18.50, பச்சை நிற அரை லிட்டர் ரூ.21, ஆரஞ்சு நிறம் ரூ.23, இளஞ்சிவப்பு ரூ.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications