பாலில் எவ்வளவு கொழுப்பு இருக்கணும்? கலர் கலராக பால் பாக்கெட்.. ஆவின் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில், கொழுப்பு தேவைக்கு ஏற்ப டிலைட் பால், டயட் பால், ப்ரீமியம் பால் என மூன்று வகையான நிறங்களில் பால் வகைகளை சந்தைப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை மாதம் ஒன்றுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவில் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் ழுமுவதும் 10,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களின் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் ஆவின் நிறுவனம் மூலமாக மூன்று வகையான பால் வகைகளை முன்னிறுத்தி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
* பசும்பாலில் சராசரியாக 3% முதல் 4% கொழுப்புச் சத்தும் 7.5% முதல் 8.5% வரை இதரச் சத்துக்களும் இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் கொண்ட ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பாலில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகை பால் பயன்படுத்துவர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கும்.
* கொழுப்புச் சத்து குறைவான பால் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக வயதானவர்கள், மருத்துவ ஆலோசனை பெற்று பால் அருந்துபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்காக சமன்படுத்தப்பட்ட பால் 3.0% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள நீல நிற பாக்கெட்டுகளிலும் மற்றும் இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் 1.5% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள இளஞ்சிவப்பு பாக்கெட்டுகளிலும் வழங்கப்படுகிறது.
* அதிக கொழுப்புச் சத்துள்ள பாலை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறை கொழுப்பு பால் 6.0% கொழுப்பு மற்றும் 9.0% இதரச்சத்துள்ள ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே மக்களின் தேவையைக் கருதியும், மருத்துவ ரீதியாக ஏற்புடைய அளவில் நியாயமான விலைக்கு இவ்வகை பால் பாக்கெட்டுகள் எந்தவித தங்கு தடையுமின்றி வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைதாரர்களுக்கு டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் மற்றும் பிற பால் வகைகள் அட்டைகள் மூலமும் தேவைப்படும் அளவுக்கு வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications