4 வகையான ஐஸ்கிரீம்கள் மட்டுமே விலை ஏற்றம்! மற்றபடி எப்போதும் போல்! ஆவின் நிர்வாகம் விளக்கம்!
சென்னை: ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், எல்லா வகை ஐஸ்கிரீம்களின் விலையும் உயர்த்தப்படவில்லை என்றும் 4 வகை ஐஸ்கிரீம்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவினில் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்து வருவதாகவும் கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஆவின் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும்.
அனைவரும் எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனிடையே கடந்த தீபாவளி நேரத்தில், ஆவின் நெய் விலை லிட்டருக்கு ₹70 முதல் ₹100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ₹30 முதல் ₹50 வரையிலும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருவது கவனிக்கத்தக்கது.
ஆவினில் பால் மற்றும் ஐஸ்கிரீம் மட்டுமல்ல சாக்லெட்கள், இனிப்புகள், நெய், என இன்னும் பல பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வப்போது ஆவின் விலை ஏற்றம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடும் போதெல்லாம் சலசலப்புகள் எழுவது வாடிக்கையாக உள்ளது.சென்னை: ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், எல்லா வகை ஐஸ்கிரீம்களின் விலைகள் உயர்த்தப்படவில்லை என்றும் 4 வகை ஐஸ்கிரீம்களின் விலையை மட்டுமே உயர்த்தியுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவினில் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்து வருவதாகவும் கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஆவின் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும்.
அனைவரும் எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனிடையே கடந்த தீபாவளி நேரத்தில், ஆவின் நெய் விலை லிட்டருக்கு ₹70 முதல் ₹100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ₹30 முதல் ₹50 வரையிலும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருவது கவனிக்கத்தக்கது.
ஆவினில் பால் மற்றும் ஐஸ்கிரீம் மட்டுமல்ல சாக்லெட்கள், இனிப்புகள், நெய், என இன்னும் பல பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வப்போது ஆவின் விலை ஏற்றம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடும் போதெல்லாம் சலசலப்புகள் எழுவது வாடிக்கையாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?

Click it and Unblock the Notifications