ஆவின் நெய், ஆவின் வெண்ணெய்க்கு திடீர் தட்டுப்பாடு.. திணறிய சென்னை.. திமுக அமைச்சரின் அதிரடி ஆக்ஷன்
சென்னை: ஆவின் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை.. சென்னையில் மீண்டும் ஒரு பற்றாக்குறை விவகாரம் கிளம்பி உள்ளது.. ஆனால், உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு, முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் பால்வளத்துறை அமைச்சர்..!!
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பாலை லிட்டர் ரூ.35 என்ற விலைக்கும், எருமைப்பாலை லிட்டர் ரூ.44 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது.
நிறுவனம்: பாலுக்கான உற்பத்தி செலவுடன் ஒப்பிடும் போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.. காரணம், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கடந்த சில வருடங்களில் அதிகமாக உயர்ந்திருப்பதால் பாலுக்கான உற்பத்தி செலவும் அதிகரித்திருக்கிறது. அதை ஈடுகட்ட பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டியது அரசின் கடமையாக உள்ளது..
அன்புமணி: இதைத்தான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கோரிக்கையாக விடுத்து வருகிறார்.. "கடந்த நவம்பர் மாதத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது. மீதமுள்ள 7 ரூபாயை இப்போது உயர்த்தி வழங்க வேண்டும் என்றுதான் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்து கொண்டு பால் கொள்முதல் விலையை இயன்ற அளவு உயர்த்தி வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
ஆவின் கொள்முதலுக்கான பாலை உற்பத்தியாளர்கள் நிறுத்தினால், முதலில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். கடந்த சில நாட்களாகவே உற்பத்தியாளர்கள் பாலை நிறுத்தி விட்டதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் ஆவின் பாலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது... அதனால், தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தினகரன் கோரிக்கை: இதுபோலலே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் வலியுறுத்தி வருகிறார்.. வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.. இப்படி பல மாதங்களாக பால் விநியோகத்தில் குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
விளக்கம்: இதையடுத்து, அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு விளக்கம் தந்திருந்தார்.. அதில், "பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம்.. ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது.. அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று உறுதி கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, ஆவினைப் பொறுத்தவரை 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதை இந்த ஆண்டில் 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளோம் என்றும் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனாலும், ஆவின் பால் வழங்கலில் பாதிப்புகள் தொடர்ந்தபடியே உள்ளன..
ஆவின் வெண்ணெய்: இந்நிலையில், சென்னையில் ஆவின் நெய், வெண்ணைய்க்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, 230-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறது. பால் உற்பத்தியாளர்கள், தனியார் மற்றும் அமுலுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதால், ஆவின் கொள்முதல் சுமார் 35 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக தெரிகிறது.

இதன் எதிரொலியாக, பால் பவுடர், உப்பு கலந்த வெண்ணை, நெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது... அத்துடன், சமையல் வெண்ணை, பாலாடை கட்டி உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பாகவே முடங்கியுள்ளது... சென்னை, அம்பத்துார் கிடங்கில் கையிருப்பில் உள்ள நெய், வெண்ணை மட்டுமே, ஆவின் நேரடி விற்பனை நிலையங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இதன்காரணமாக, சென்னையில் பல இடங்களில் நெய், வெண்ணை கிடைக்கவில்லையாம்.
தயிர் பாக்கெட்கள்: மேலும், ஆவின் தயிர் பாக்கெட்டுகள், காலாவதி தேதிக்கு முன்பாகவே புளித்து விடுவதாகவும் புகார் கிளம்பி உள்ளது.. இதையடுத்து, ஆவின் உயர் அதிகாரிகளுடன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உடனடி ஆலோசனையை நடத்தியிருக்கிறார்.. பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை தரமாக விரைந்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம்.. அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையால், பால் பொருட்களின் தட்டுப்பாடு நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications