பிக்பாஸ் சீசன் 5-ன் டிஆர்பி ப்ராடெக்ட் யார் தெரியுமா?..மின்னல் வேகத்தில் நெட்டிசன்கள் கண்டுபிடிப்பு!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5-ல் யூடியூபர் அபிஷேக் ராஜா நிச்சயம் டிஆர்பி ரேட்டை உயர்த்தும் வகையில் பயன்படுத்தப்படுவார் என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
எந்த ஒரு டிவி நிகழ்ச்சி, சீரியலாக இருந்தாலும் அதற்கு டிஆர்பி ரேட் என்பது முக்கியமானது. அந்த நிகழ்ச்சி வெற்றி அடைகிறது என்பதற்கு பலமே டிஆர்பி ரேட்டிங்தான். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காகவே சில விஷயங்களை சீசனுக்கு சீசன் விஜய் டிவி செய்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 1 இல் ஆரவ்- ஓவியா லவ், காயத்ரி- ஓவியா சண்டை, காயத்ரிக்கு கமல் குட்டு என வைத்து டிஆர்பியை ஏற்றினர். இதற்கு அடுத்து தாடி பாலாஜி, நித்யா ஆகியோர் இடையே உள்ள பிரச்சினையை பிக்பாஸ் சீசன் 2 பயன்படுத்திக் கொண்டது என்று சொல்லலாம். மற்றபடி ஐஸ்வர்யா தத்தா, ரித்விகா உள்ளிட்டோர் இருந்தனர்.

கொளுத்தி போடும் வேலை
பிக்பாஸ் சீசன் 3 இல் கவின்- லாஸ்லியா காதல், சாண்டி மாஸ்டரின் அரட்டை, முகென்- அபிராமி கெமிஸ்ட்ரி, மீராமிதுன் மோதல், கஸ்தூரி- வனிதா மோதல் உள்ளிட்ட மசாலாக்களை கலந்து டிஆர்பி ரேட்டை எகிற வைத்தனர். அதிலும் வனிதா ஒருவரை குறித்து பிறரிடம், பிறர் குறித்து மர்றவரிடம் என கொளுத்தி போடும் வேலையை செய்தார். இதனால் அவரை சாண்டி மாஸ்டர் வத்திக்குச்சி என்றே கிண்டலாக அழைத்தார்.

விஜே அர்ச்சனா
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 இல் விஜே அர்ச்சனா பாசம், அறந்தாங்கி நிஷாவின் காமெடி, அனிதா சம்பத்தின் அழுகாட்சி, சோம்- ரம்யா பாண்டியன் கெமிஸ்டிரி, ஆஜித்- கேப்ரில்லா சகோதர பாசம் என ஓடியது. பின்னர் நாட்கள் போக போக சனி, ஞாயிறுகளில் ஆரிக்கு ரசிகர்கள் இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் மோதல் போக்கை கொண்டார் பாலாஜி முருகதாஸ்.

ஆரியுடன் மோதல்
எந்த போட்டியாக இருந்தாலும் ஆரியுடன் மோதல்தான். இந்த சீசன் முழுவதுமே ஆரியுடன் பாலாஜி மல்லுக்கட்டினார். பிக்பாஸ் சீசன் 4 இல் சண்டைகள், சர்ச்சைகள், மற்றும் ரொமான்ஸ் என மசாலா கலக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பாலாஜி முருகதாஸ். ஆரியுடன் ஆவேச சண்டை, ஷனம் ஷெட்டி அழகி பட்டம் குறித்து சர்ச்சையாக பேசியது, சைக்கிள் கேப்பில் ஷிவானியுடன் ஆட்டோ ஓட்டுவது என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

டைட்டிலை பெற முயற்சி
ஆரியுடன் மோதி எப்படியாவது டைட்டிலை பெற முயன்றார். ஆனால் அது முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு சீசனிலும் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க சிலர் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5-லும் இது போல் டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் உத்தி கையாளப்படும் என தெரிகிறது. இந்த சீசனில் பாலாஜி முருகதாஸை போல் யூடியூபர் அபிஷேக் ராஜா பயன்படுத்தப்படுவார் என தெரிகிறது. இந்த அபிஷேக்கை திடீரென கத்துகிறார், அழுகிறார், யாரையாவது கலாய்க்கிறார்... பார்ப்போம் இவர்தான் பாலாஜி முருகதாஸா என்பதை!
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications