தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட்
சென்னை: ABP Nadu நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில், தவெக 4 முதல் 6 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, திமுக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 5 மாநிலங்களில் ஜனநாயகத் திருவிழாவான சட்டமன்றத் தேர்தல்கள் களைகட்டியுள்ளன. அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று (ஏப்ரல் 9 ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஓரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்திற்கு 23, 29 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

அனல் பறக்கும் தேர்தல் களம்
தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது, நான்கு முனை போட்டியாக நடைபெறும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி 20+ கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. அதிமுக தலைமையில் பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிகளம் காண்கிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி, மற்றும் நடிகர் விஜய்யின் தவெக கட்சி தனித்து போட்டியிடுகிறது.
ABP Nadu - தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்
இதற்கிடையே, பல்வேறு ஊடக நிறுவனங்கள், தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த தேர்தலில் இளைஞர்களின் ஆதரவு தவெகவுக்கு அதிகம் உள்ளதால் எத்தனை இடங்கள் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
அந்தவகையில், ABP Nadu நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 தொகுதிகள் வரை வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என ABP நாடு செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக 4- 6 சீட்
அதிமுக கூட்டணி 50 முதல் 58 தொகுதிகளிலும், விஜய்யின் தவெக 4 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் என ABP Nadu நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பில்லை என்றும் இந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த முறை மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 4 முதல் 6 சீட்டுகளை வெல்லும் என இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதாவது, தவெக, சென்னை, மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், டெல்டா மண்டலம் என 5 மண்டலங்களிலும் தலா 1 இடம் முதல் அதிகபட்சமாக 2 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக ABP Nadu நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் - கணிப்பு ரிசல்ட்
திமுக+: 172 - 179 தொகுதிகள்
அதிமுக: 50 - 58 தொகுதிகள்
தவெக: 4 - 6 தொகுதிகள்
மற்றவர்கள்: 0
வாக்கு சதவீதம் - கருத்துக்கணிப்பு ரிசல்ட்
திமுக+: 40 - 42%
அதிமுக: 32-35%
தவெக: 18 - 20%
நாம் தமிழர் கட்சி: 4 - 6%
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications