புதுசா ஏசி வாங்க போறீங்களா? இந்த 10 விஷயங்கள் ரொம்ப முக்கியம்
சென்னை: கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் வெளியில் சென்றால் தான் அனல் தகிக்கிறது என்றால் வீட்டிற்குள் பேன் ஓடினாலும் வியர்த்து கொட்டுகிறது. இதனால் பலரும் ஏசி வாங்கி மாட்டிக்கொள்கின்றனர். அப்போது பெரும்பாலனோருக்கு என்ன ஏசி வாங்கினால் நன்றாக இருக்கும்? எத்தனை டன் வசதி கொண்ட ஏசி வாங்க வேண்டும் என்ற பல குழப்பங்கள் வரும்.
ஸ்ப்லிட் ஏசி வாங்கலாமா, விண்டோ ஏசி வாங்கலாமா அல்லது இன்வெர்டர் ஏசியா இல்லை நான்இன்வெர்டர் ஏசியா என கடைக்கு போன பிறகு தான் பல குழப்பங்கள் வரும். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், ஏசி வாங்கினால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்தும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஸ்ப்லிட் ஏசி: இது பெரிய அறைகளுக்கு (120-200 சதுர அடி) மிகவும் பொருத்தமானது.
விண்டோ ஏசி: இது சிறிய அறைகளுக்கும் குறைந்த செலவில் ஏசி வாங்க விரும்புபவர்களுக்கும் ஏற்றது. உங்கள் அறையின் அளவும், நிறுவும் இட வசதியும் பொறுத்து எந்த மாதிரியான ஏசி வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ளலாம்.
எத்தனை டன் ஏசி வாங்கலாம்?
எந்த அறைக்கு எத்தனை டன் ஏசி அவசியம் என்பது அறிந்து கொள்வது அவசியம். உங்கள் ரூமை ஜில்லென்ற சூழலில் பராமரிக்க இது அவசியமான ஒன்றாகும்.
* 120 சதுர அடி வரை: 1 டன்
* 120-180 சதுர அடி: 1.5 டன்
* 180 சதுர அடிக்கு மேல்: 2 டன்
இன்வெர்டர் vs நான்இன்வெர்டர் ஏசி: எது பெஸ்ட்?
இன்வெர்ட்டர் என்பது ஏசிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். இதில் மின்சார மாற்றங்கள் (fluctuation) மற்றும் ட்ரிப்பிங் பிரச்சனைகளுக்கு தனியாக வெளிப்புற சாதனம் (stabilizer) பொருத்த வேண்டிய அவசியம் இல்லை.
இன்வெர்டர் ஏசி:
மின்சாரத்தை மிச்சப்படுத்தும், தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றது.
நான்இன்வெர்டர் ஏசி:
* விலை குறைவாக இருந்தாலும், அதிக மின்சாரத்தை பயன்படுத்தும்.
நீண்ட காலம் பராமரிப்புக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்றதுமாக இருக்க வேண்டும் என கருத்தில் கொண்டால், இன்வெர்டர் ஏசிகள் பொதுவாக சிறந்த தேர்வாகும்.
* ஏசி வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் மின்சார பயன்பாட்டை குறைக்க கூடிய ஸ்டார் ரேட்டிங் பார்த்து வாங்குவது அவசியம்.
3-ஸ்டார் ஏசி:
பெர்பார்மன்ஸ் (ஏசி இயங்கும் செயல்பாடு) மற்றும் விலை ஆகியவற்றுக்கு சமநிலையுடன் இருக்கும். அதாவது விலை குறைவாக இருக்கும். அதற்கு ஏற்ற பெர்பாமர்ன்ஸ் இதில் இருக்கும்.
5-ஸ்டார் ஏசி:
* ஆரம்ப செலவு அதிகமாக இருந்தாலும், அதாவது வாங்கும் செலவும் அதிகமாக இருந்தாலும் நாள்பட்ட பயன்பாட்டில் அதிக மின்சார சேமிப்பை அளிக்கும்.
* நீங்கள் 5-ஸ்டார் ஏசி வாங்குவது செய்தால், அது சிறந்த செயல்திறன் கொண்டதாக இருக்கும்.
கவனிக்க வேண்டிய விஷயம்
* ஏசியை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், ஏசி நீடித்த உழைப்பை பெற காப்பர் காயில் கொண்ட ஏசியே சிறந்த தேர்வாக இருக்கும்.
* இது வேகமாக குளிரூட்டும் திறன் கொண்டது, அதிக நாள் நீடிக்கும், மேலும் கோளாறு இருந்தால் ரிப்பேர் செய்வதும் எளிதும் குறைந்த செலவிலும் இருக்கும்.
ஸ்மார்ட் அம்சங்கள் கூடுதல் வசதி தரும்:
பல ஏசிகளில் Wi-Fi மற்றும் AI அம்சங்கள் உள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் அல்லது வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம் ஏசியை கட்டுப்படுத்தலாம். இந்த அம்சங்கள் ஸ்மார்ட் ஹோம் மற்றும் தொலைதூர கட்டுப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆன்லைனில் வாங்கினீர்கள் என்றால் ரிவியூஸ்களை நன்றாக பார்த்து வாங்குவது சிறந்தது. அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றில் வாங்கினால், ரேட்டிங்ஸ் பார்த்து வாங்குவது நல்லது. குறைந்த ரேட்டிங்ஸ் இருந்தால் அந்த வகை ஏசியை வாங்காமல் இருப்பது நல்லது.
வாரண்டி முக்கியம்
ஏசி வாங்குபவர்கள் வாரண்டி விஷயங்களையும் பார்க்க வேண்டியது அவசியம்.
கம்ப்ரெசர் வாரண்டி: ஏசியில் கம்ப்ரெசருக்கு குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை வாரண்டி இருக்க வேண்டும்.
பொருள் (Product) வாரண்டி: குறைந்தது 1 ஆண்டு வாரண்டி அவசியம் இருக்க வேண்டும்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications