நாட்டின் முதலாவது புல்லட் ரயில்.. 280 கிமீ வேகத்தில் வருகிறது.. AC ரயிலில் சென்னை ஐசிஎப் அசத்தல்
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக மணிக்கு, 280 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக புல்லட் ரயிலை, சென்னை ஐசிஎப் தயாரிக்க உள்ளது.. பிஇஎம்எல்-உடன் இணைந்து இந்த ரயிலை தயாரிக்க உள்ள நிலையில், மிக முக்கிய தகவல் ஒன்றை ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
உலகளவில், அளவிலேயே, ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, சென்னையின் ஐசிஎஃப் விளங்கி கொண்டிருக்கிறது.. இந்த ஐசிஎப்பில் 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாராகி ஓடிக் கொண்டிருக்கின்றன.

மக்களிடம் பிரபலமாகியிருக்கும் பாரத் ரயில்களின் தயாரிப்புகளும் இங்குதான் இந்த ஐசிஎப்பில்தான் நடக்கிறது.. 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இதுவரை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎப் அடுத்தடுத்த அதிரடி: வந்தே பாரத் தவிர, சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள், ஐசிஎப்யில் நடந்து வருகிறது. வந்தே மெட்ரோ ரயில்களும், இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றன... அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்களின் பணிகளும் இங்குதான் நடைபெற்று வருகின்றன. வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் போன்றவைகளும் இதே ஐபிஎப்பில்தான் தயாரிக்க போகிறார்கள்.
இவைகளை தவிர, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களும் இங்குதான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த படுக்கை வசதியுள்ள, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துவிட்டன.
அதிவேக புல்லட் ரயில்: இப்படிப்பட்ட சூழலில், அடுத்த மகிழ்ச்சியை ஐசிஎப் வெளியிட்டிருக்கிறது.. அந்தவகையில், நாட்டிலேயே முதல் முறையாக மணிக்கு, 280 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலை ஐசிஎப் தயாரிக்க போகிறதாம்.. அந்தவகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், பெங்களூரில் செயல்படும் பிஇஎம்எல் நிறுவனத்துடன், ஐசிஎப் நிறுவனம் இணைந்து, இந்த அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம், வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், ரயில் பாதையில் அதிக வளைவுகள் போன்ற காரணங்களால், 130 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடிகிறது. எனவேதான், மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. பிஇஎம்எல் நிறுவனத்துடன், ஐசிஎப் நிறுவனம் இணைந்து, இந்த அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளது.
கட்டமைப்புகள்: இதுகுறித்து, ஐசிஎப் அதிகாரிகள் சொல்லும்போது, நம்முடைய நாட்டில் அதிக வேக ரயில்களின் தேவை அதிகரித்து கொண்டிருப்பதால், அத்தகைய ரயில்களை தயாரிக்கவும், அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், மும்பை -- குஜராத்தின் ஆமதாபாத் இடையே, முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில், 353 கிமீ தூரத்திற்கும், மஹாராஷ்டிராவில், 156 கிமீ தூரத்துக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் மணிக்கு, 280 கிமீ வேகத்தில் ரயில் ஓடும்.
ஏசி வசதிகள்: இந்த ரயிலை பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து, ஐசிஎப் தயாரிக்க உள்ளது. விரைவில் முதல் அதிவேக ரயிலை தயாரிக்க உள்ளோம். இதில் 12 பெட்டிகள் மட்டுமே இருக்கும். எல்லா பெட்டிகளும், AC வசதிகளுடன் சொகுசு பெட்டிகளாக இருக்கும். வரும் 2026ல் இந்த ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications