ஏசி கூலிங் குறைவாக இருக்கா? மழைக்காலத்தில் ACயை இப்படி யூஸ் பண்ணுங்க..அதென்ன டூ இன் ஒன் ஏ.சி.? வாவ்
சென்னை: மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? ஏசி விடிய விடிய ஓடினாலும், கரண்ட் பில் குறைவாக வரவேண்டுமா? ஏசி கூலிங் குறைவாக இருக்கிறதா? அப்ப இந்த டிப்ஸ்களை பாருங்க
வெயில் காலமே என்றாலும்கூட, குறைந்த வெப்பநிலையில் ACயை ஓடவிடாமல், 16 அல்லது 18 டிகிரியில் வைத்து கொள்ள வேண்டும். நம்முடைய உடலுக்கு 24 டிகிரி வெப்பநிலை என்பதால், குறிப்பிட்ட அளவுதான் கூலிங் வைக்க வேண்டும். AC-யை 20 முதல் 24 டிகிரிகள் வரை செட் செய்துகொண்டால், உங்கள் கரண்ட் பில் குறையும்..

பில்டர்கள்: விண்டோ AC அல்லது ஸ்பிலிட் AC எதுவாக இருந்தாலும், கண்டன்சர் யூனிட் வீட்டிற்கு வெளியேதான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், வீட்டிற்குள் இருக்கக்கூடிய யூனிட்டிலும் தூசுகள் ஃபில்டர்களில் நுழைவதற்கு வாய்ப்புள்ளதால், AC ஏசி வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்து அறையை குளிர்ச்சிப்படுத்தும்.. இதனால், கரண்ட் பில் அதிகமாகிவிடும். எனவே, ஏசியின் ஃபில்டர்கள் சீராக இயங்கினாலும்கூட, 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்பிலிட் ACகளை வீட்டில் பொருத்தும்போதே, சூரிய வெளிச்சம் படாத, நிழல் பகுதியில் சுவற்றில் பொருத்த வேண்டும். ரூமில் எத்தனை பேர் தங்குகிறார்கள் என்பதை பொறுத்தும் ஏசியின் குளிர்தன்மை மாறும். அதிகமானோர் ரூமில் தங்கியிருந்தால், ஏசி காற்று குளிரும் குறைவாகவே இருக்கும்.
அனல் காற்று: AC ரூம் கதவுகள், ஜன்னல்களை சரியாக மூடிவைக்க வேண்டும். அடிக்கடி இவைகளை திறக்கக்கூடாது.. கதவை அடிக்கடி திறந்து மூடினால், வெளியிலிருக்கும் அனல் காற்று உள்ளே புகுந்துவிடுவதுடன், ஜில் காற்றும் வெளியே போய்விடும்.
AC ஓடும்போது ஃபேன் போடக்கூடாது. அறையில் நிறைய பொருட்களை அடைத்து வைத்தாலும் குளிர்ச்சி கிடைக்காது. சமயத்தில் பல விளக்குகளை ரூமில் எரிய விடக்கூடாது. இதனால் உமிழப்படும் வெப்பத்தை, ஏசியே கிரகித்து கொள்ளும். எனவே அறையில் விளக்குகளை தேவையில்லாமல் எரிய விடக்கூடாது.
குளிர்ச்சி : ஏசி "ON" மோடிலேயே இருந்தால், அறையின் வெப்பநிலை பாதித்துவிடும். அதனால், ரூம் குளிர்ச்சியானதும் நிறுத்தி வைத்துவிட வேண்டும்.. மீண்டும் குளிர்ச்சி குறையும்போது, ஏசியை ஆன் செய்து கொள்ளலாம்.
தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டதால், ஏசியின் பயன்பாடுகள் குறைந்துவிடும். எனினும், குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தும்போது அவை எளிதில் பழுதாகும் வாய்ப்பு நிறையவே உள்ளது. காரணம் AC எந்திரங்களில் உள்ள கண்டென்சிங் யூனிட், குளிர்காலத்தில் பழுதாக வாய்ப்புள்ளது.
எண்ணெய்: எப்போதுமே AC கம்ப்ரசர் இயங்குவதற்கு, ரசாயன எண்ணெய் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயின் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே, குளிர்காலத்தில் இந்த எண்ணெய் உறையக்கூடும். இப்படி உறைந்துவிட்டால், ஒட்டுமொத்தமாக ஏசி இயந்திரமே பழுதாகிவிடும்.
எனவே, குளிர்காலம் முடிந்ததுமே, உடனே ஏசியை பயன்படுத்தாமல், முறையாக சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக, அதில் நிரப்பப்பட்டிருக்கும் வாயுவின் அளவையும் சரிபார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, AC கம்ப்ரசர் வீட்டின் வெளியில் இருக்கும்போது அவுட்டோர் யூனிட்டில் இருக்கும்.. மழைக்காலத்தில் இதில் ஈரம் படும்போது அதன் பாகங்கள் துருப்பிடிக்கும் என்பதால், பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிவைக்க வேண்டும்.
காற்றுத்திறன்: அதேபோல, AC வாங்குவதாக இருந்தால், நல்ல திறனுள்ள, நல்ல கொள்ளளவு கொண்ட AC யாக பார்த்து வாங்க வேண்டும். ரூமின் அளவைவிட, ஏசி கொள்ளளவின் அளவு குறைவாக இருந்தால் ஜில் காற்று திறனும் குறைவாக இருக்கும்.
மழைக்காலத்துக்கும் சேர்த்தே ஏசி வாங்கவேண்டும். கூலிங் தருவதைபோலவே, ஹீட்டர்களாக பயன்படுத்திக் கொள்ளும் வசதி, இப்போதுள்ள ஏசிகளில் உள்ளன.. மழை + வெயில் இரண்டிற்குமான ஏசியை தேர்வு செய்யும்போது, உங்கள் சுற்றுச்சூழலின் வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications