கம்பியை பிடிச்சுட்டு.. அன்னைக்கு குலுங்கி குலுங்கி அழுதாரே.. இன்னைக்கு ஏன் இப்படி திடீர் முடிவு..!
ஏசி சண்முகம் இந்த முறை போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்
சென்னை: குலுங்கி குலுங்கி அன்னைக்கு அழுதாரே ஏசி சண்முகம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவே போவதில்லை என்று திட்டவட்டமாக சொல்லி உள்ளார்.. இந்த பேச்சுதான் அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகத்தை பொறுத்தவரை யாருக்கும் எந்த தொந்தரவும் தராதவர்.. வேலூரில் துரைமுருகனுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறதோ, அதே அளவுக்கு இவருக்கும் ஆதரவு உள்ளது..
இருவருக்குமே பல ஒற்றுமைகள் உண்டு.. காலேஜ் நடத்துவதில் இருந்து பல விஷயங்களில் ஒரே மாதிரிதான்.. ஒரே இனம்தான்.. அதனால், சாதீய ஓட்டுக்கள் இவர்களுக்கு எப்போதுமே கை கொடுக்கும்..!

வாய்ப்பு
அதனால்தான் பெரும்பாலும் ஏசி சண்முகத்தை அதிமுக பயன்படுத்தி கொள்ளும்.. தேர்தல்களில் வாய்ப்பு அளிக்கும்.. இரட்டை இலை சின்னத்தில் நின்றாலும் சுளையான ஓட்டுக்களை அள்ளிவிடுவார் ஏசி சண்முகம்.. இதை மனசில் வைத்துதான், இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு தர அதிமுக தயாரானது.. சில தினங்களுக்கு முன்புகூட அதிமுகவின் உத்தேச வேட்பாளர் லிஸ்ட்டில் வேலூர் தொகுதியில் ஏசி சண்முகத்துக்கு சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஏசி சண்முகம்
ஆனால் தன் கட்சி சார்பில், 5 சீட் வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கேட்டிருக்கிறார் ஏசி சண்முகம்.. அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை போலும்.. அதனால், 4 சீட்டுக்கு இறங்கி வந்துள்ளார்.. அதற்கும் அவர்கள் பிடிகொடுக்கவில்லை போலும்.. இதனால், இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டார் ஏசி சண்மும். இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திடீர் முடிவு
அதில், "அதிமுக கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு சரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று 11 தொகுதிகளை முன் வைத்து, ஐந்து தொகுதிகள் கேட்டோம்... பிறகு ஒன்பது தொகுதிகளை முன்வைத்து, நான்கு தொகுதிகள் கேட்டோம்.. ஆனால், கேட்ட தொகுதிகள், கேட்ட எண்ணிக்கையில் ஒதுக்கி தரப்படவில்லை... எனவே, இந்த தேர்தலில் போட்டியிட புதிய நீதிக்கட்சி விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மய்யம்
ஏசி சண்முகத்தின் இந்த அறிக்கை பெரும் சலசலப்பை அதிமுக கூட்டணியில் ஏற்படுத்தி வருகிறது.. ஏற்கனவே விஜயகாந்த் வெளியே வந்துவிட்டார்.. கருணாசையும் காணோம்.. சரத்குமாரும் மய்யம் போய்விட்டார்.. ஜிகே வாசனும் இழுபறியில் இருக்கிறார்.. இப்படி எல்லாரையும் கைவிட்டுவிட்டால் அதிமுகவுக்கு பலம் போய்விடுமோ என்ற கலக்கம் சூழ்ந்து வரும் நிலையில், ஏசி சண்முகமும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுதான் அந்த பரபரப்புக்கு காரணம்.

திமுக
ஏசி சண்முகத்தை பொறுத்தவரை எத்தனை சீட் ஒதுக்கினாலும், அவைகளை தானே முன்னின்று சகலத்தையும் கவனித்து கொள்வார்.. அதுமட்டுமல்ல, கடந்த எம்பி தேர்தலுக்கு முந்தைய தேர்தலில், ஏசி சண்முகம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். அதாவது அதிமுக முதலிடம் என்றால், ஏசி சண்முகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார்.. திமுகவையே 3வது இடத்துக்கு தள்ளிவிட்டார்.

சிறப்பு
போதாக்குறைக்கு இவரிடம் பணத்துக்கு பஞ்சமே இல்லை. தொகுதிக்குள் "தாராளங்கள்" நிறைய காட்டுவார்.. இதுவும் அதிமுகவுக்கு ஒரு பிளஸ்தான்... கடந்த முறை எம்பி தேர்தலில் இவருக்கு நேர்ந்த சோகம் யாருக்குமே வரக்கூடாது... திடீரென ரெய்டு நடந்து வேலூர் தேர்தல் தள்ளி போக, அப்படியே இடிந்து போய்விட்டார்.. கண்ணீர் விட்டு கதறினார்... அவ்வளவையும் எதிர்கொண்டு இந்த முறையும் கூட்டணிக்குள் நுழைந்து கெத்து காட்ட ஏசி சண்முகம் தயாராகிய நிலையில், அதிமுக இதையும் பரிசீலித்தால் சிறப்பாக இருக்குமே என்பதுதான் அனைவரது எண்ணமும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications