தமிழகத்தில் இடதுசாரிகளின் எழுச்சியை பாருங்க.. 8 தொகுதிகளில் வெற்றி கன்பார்ம்.. நக்கீரன் கணிப்பு
சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த இடதுசாரி கட்சிகள் இந்த முறை பெரிய அளவில் எழுச்சி பெறும் என்று நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில் கூறியுள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.தமிழகத்தில் தி.மு.ககூட்டணி -அ.தி.மு.க கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி களம் காண்கிறது. நாம் தமிழர் தனியாக களம் இறங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.எம்) ஆகிய கட்சிகள் தி.மு.க கூட்டணியில் உள்ளன.

கருத்து கணிப்பு பலவிதம்
ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஒரு சில இடங்களில் கடும் போட்டி இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

திமுக வெற்றி பெறும்
இதில் ஏராளமான கருத்து கணிப்புகள் தி.மு.க 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று அரியணையில் அமரும் என்று கூறியுள்ளன. இதே போல் நக்கீரன் இதழ் நடத்திய கருத்து கணிப்பிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. அந்த வகையில் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த இடதுசாரி கட்சிகள் இந்த முறை வலுவாக எழுச்சி பெறுகிறது என்று நக்கீரன் கருத்து கணிப்பில் கூறியுள்ளது.

எழுச்சி பெறும் இடதுசாரிகள்
அதாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.எம்) தளி , அரூர், கீழ்வேளூர் (தனி), கந்தர்வக்கோட்டை (தனி) ஆகிய தொகுதிகளில் வெற்றியை வசப்படுத்தும் என்று நக்கீரன் கருத்து கணிப்பில் கூறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( சி.பி.ஐ) பவானிசாகர் (தனி), திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி (தனி), வால்பாறை (தனி) ஆகிய தொகுதிகளில் வெற்றி நிலை நாட்டும் என்றும் கணித்துள்ளது.

8 தொகுதிகளின் வெற்றி
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்து 50 தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரி கட்சிகள் படுதோல்வியை தழுவியது. அந்த வகையில் பார்த்தால் தற்போது 8 இடங்களை இடதுசாரி கட்சிகள் கைப்பற்றும் என்று நக்கீரன் கணித்துள்ளது. இது இடதுசாரிகளின் எழுச்சியையே காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications