தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா காலமானார்- தலைவர்கள், படைப்பாளிகள் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா (வயது 57) இன்று மாரடைப்பால் காலமானார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். இதன் மாநில துணைப் பொதுச்செயலாளரான கருப்பு கருணா, திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கலை இரவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்திக் காட்டியவர்.

நாடகக் கலைஞர், படைப்பாளி என பன்முக ஆளுமையாளர். கருப்பு கருணாவின் ஏழுமலை ஜமா குறும்படம் பெரிய அளவில் பேசப்பட்டதுடன் விருதுகளையும் பெற்றது. இன்று அவர் மாரடைப்பால் திடீரென காலமானார்.
கருப்பு கருணாவின் மறைவுக்கு சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு தலைவர்கள், படைப்பாளிகள், ஆளுமைகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமது முகநூல் பக்கத்தில், பெரும் துயர். தோழர் கருப்பு கருணாவை நான்கு ஐந்து ஆண்டுகளாகத் தான் தெரியும்; ஒரே ஒருமுறை தான் திருவண்ணாமலை நிகழ்வில் சந்தித்திருக்கிறோம் என்றாலும் அடிக்கடி உள்பெட்டியில் உரையாடுவோம். தீவிரமான களப்பணியும் சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அண்மையில் கூட அவரது பச்சை வேட்டி புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தேன். நெருநல் உளனொருவன் இன்றில்லை என இரங்கல் செய்தி பதிவு செய்துள்ளார்.

தோழர் கருப்பு கருணா இறந்துவிட்டார் என்ற நெஞ்சை உலுக்குகிறது.
— G Ramakrishnan (@grcpim) December 21, 2020
அவர் தமுஎகச மாநில தலைவர்களில் ஒருவர். துடிப்புமிக்க செயல்பாட்டாளர்.
புத்தாக்க சிந்தனையாளர்.
அவர் மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கல்.
செவ்வஞ்சலி. pic.twitter.com/ttg0QqdVPl
சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், தோழர் கருப்பு கருணா இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. அவர் தமுஎகச மாநில தலைவர்களில் ஒருவர். துடிப்புமிக்க செயல்பாட்டாளர். புத்தாக்க சிந்தனையாளர்.அவர் மறைவு தமுஎகச வுக்குமட்டுமல்ல கலை இலக்கிய துறைக்கே பேரிழப்பு. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். செவ்வஞ்சலி என பதிவிட்டுள்ளார்.
த.மு.எ.க.ச மாநில துணைப் பொது செயலாளர் அண்ணன் கருப்பு கருணாவின் மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சியுற்றேன். எழுத்தாலும் - செயலாலும் அன்றாடம் சமூக மாற்றத்துக்காகவே உழைத்த அண்ணனின் குடும்பத்தார், த.மு.எ.க.ச - இடதுசாரி தோழர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/wn6o9HB6Ns
— Udhay (@Udhaystalin) December 21, 2020
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், த.மு.எ.க.ச மாநில துணைப் பொது செயலாளர் அண்ணன் கருப்பு கருணாவின் மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சியுற்றேன். எழுத்தாலும் - செயலாலும் அன்றாடம் சமூக மாற்றத்துக்காகவே உழைத்த அண்ணனின் குடும்பத்தார், த.மு.எ.க.ச - இடதுசாரி தோழர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் கருப்பு கருணா மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருக்கு என் அஞ்சலி pic.twitter.com/ACMGLFMLtQ
— Dr Ravikumar M P (@WriterRavikumar) December 21, 2020
விசிக லோக்சபா எம்.பி. ரவிக்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் கருப்பு கருணா மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.
தமுஎகச மாநில துணைச் செயலாளர் தோழர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— G. Sundarrajan (@SundarrajanG) December 21, 2020
தோழனே ஏன் இவ்வளவு அவசரம்.
ஆழ்ந்த இரங்கல் pic.twitter.com/SmMMEl7pMM
பூவுலகின் நண்பர்கள் ஜி சுந்தரராஜன், தமுஎகச மாநில துணைச் செயலாளர் தோழர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தோழனே ஏன் இவ்வளவு அவசரம். ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
தமுஎகச -வின்
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) December 21, 2020
மாநில துணை பொதுச்செயலாளர்,
தோழர் கருப்பு கருணா மறைவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!
தோழருக்கு நீல வணக்கம் செலுத்துவோம்.!!@beemji pic.twitter.com/LSSPn3uqX3
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture, தமுஎகச -வின் மாநில துணை பொதுச்செயலாளர், தோழர் கருப்பு கருணா மறைவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!தோழருக்கு நீல வணக்கம் செலுத்துவோம்.!!என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications