விஜய் கட்சிக்கு நடிகர் அஜித் ஆதரவு? ரேஸ் கார் கலரை கவனிச்சீங்களா? கொண்டாடும் தவெக தொண்டர்கள்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். இவரது கட்சிக்கு நடிகர் அஜித் ஆதரவு தெரிவித்துள்ளாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு விஜயின் கட்சி கொடி நிறத்திலேயே துபாயில் நடிகர் அஜித்குமாரின் அணி சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட ரேஸ் காரின் நிறமும், அஜித் அணிந்திருந்த உடையின் வண்ணமும் இருப்பது தான் முக்கிய காரணமாகும்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், நடிகர் தன்னுடன் கூட்டணி வைக்க பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு தரப்படும் என்று வெளிப்படையாக அறிவித்தது. இது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கலங்கடித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க தற்போது நடிகர் அஜித் குமார், நடிகர் விஜயின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதற்கு இன்று வெளியான அஜித்குமாரின் அணி சார்பில் வெளியான ரேஸ் காரின் போட்டோவும், நடிகர் அஜித் அணிந்திருந்த உடையும் தான் காரணம் தான். அதாவது நடிகர் விஜயின் கட்சியின் கொடியின் மேல் மற்றும் கீழ்புறத்தில் சிவப்பு நிறம் இருக்கிறது. நடுவில் மஞ்சள் நிறம் இருக்கும். இந்த மஞ்சள் நிறத்தில் 2 போர் யானைகள் மற்றும் வாகை மலர் உள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் அஜித்குமார் பட நடிப்புக்கு நடுவே கார், பைக் ரேஸில் மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அஜித் குமார் , 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை தொடங்கி உள்ளார். இதற்கான லோகோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்பட உள்ளார். இதற்கிடையே தான் ஐரோப்பா ரேஸுக்கு முன்பாக 24ஹெச் துபாய் 2025 என்ற ரேஸ் நடைபெற உள்ளது.
இந்த துபாய் ரேஸில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்குமாரின் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Porsche 992 GT3 Cup காராக அது உள்ளது. இது உயர்ரக ரேஸ் கார்களில் ஒன்றாகும். இந்த காரில் அஜித் குமார் ரேஸிங் என்று அவரது அணியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த காரில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் உள்ளன.
இந்த காரின் அருகே நடிகர் அஜித் குமார் ரேஸ் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அவரது உடையின் ஒரு பகுதியிலும் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு வண்ணங்கள் உள்ளன. இது பார்க்க நடிகர் விஜயின் தவெக கொடியின் நிறத்தை போலவே உள்ளதாகவும், நடிகர் அஜித் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது பேசும்பொருளாகி உள்ளது.
முன்னதாக விரைவில் நடைபெற உள்ள போர்சே 992 ஜிடி3 கார் பந்தயத்திற்காக கடந்த மாதம் அஜித் குமாரின் சோதனை ஓட்டம் மேற்கொண்டார். அப்போது அவரது ஹெல்மட் மற்றும் காரில் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை லோகோ இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருந்தார். அப்போது அதுவும் பேசும்பொருளானது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளதால் நடிகர் அஜித்தின் ஆதரவை பெற உதயநிதி ஸ்டாலின் முயற்சிப்பதாக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இத்தகைய சூழலில் தான் இன்று வெளியான நடிகர் அஜித்தின் கார் மற்றும் அவர் அணிந்திருந்த உடை என்பது தவெக கட்சியின் கொடி நிறத்தில் அமைந்து இருப்பதாகவும், அஜித், விஜயின் கட்சிக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்கு மீண்டும் பங்கேற்க தொடங்கி உள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications