என்ன சொல்றீங்க.. லடாக் டிரிப் போன அஜித் பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லையா.. கிளம்பிய புதிய சர்ச்சை
சென்னை: நடிகர் அஜித் இப்போது லடாக்கிற்கு பைக் பயணம் சென்றுள்ள நிலையில், அவரது பைக் குறித்து சர்ச்சை கிளம்பி உள்ளது.
நடிகர் அஜித்குமார் இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஏ.கே.61 படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
வங்கிக் கொள்ளை அடிப்படையில் இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்
படப்பிடிப்பிற்கு இடையே அஜித் அவ்வப்போது பிரெக் எடுத்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பா நாடுகளில் அஜித் பைக் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி இருந்தது. ஏ.கே.61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், சின்ன பிரேக் எடுத்து மீண்டும் ஒரு பைக் பயணம் சென்றுள்ளார் அஜித்!

லடாக்
இந்த முறை நண்பர்களுடன் இணைந்து லடாக் வரை பைக் பயணம் மேற்கொள்கிறார். இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மணாலி, உள்ளிட்ட இடங்களில் அஜித் இருக்கும் படங்கள் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நடிகை மஞ்சு வாரியரும் அஜித்தின் பைக் பயணத்தில் இணைந்து சென்றுள்ளார். இதற்கு அஜித்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராமிலும் புகைப்படத்தைப் பகிர்ந்து இருந்தார்.

சர்ச்சை
இதனிடையே, அஜித்தின் பைக் பயணம் இணையத்தில் புதியதொரு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. லடாக் பயணத்திற்கு அஜித் BMW R 1200 என்ற மாடலையே பயன்படுத்துகிறார். கடந்த சில நாட்களாக வெளியான அஜித்தின் புகைப்படங்களில் இதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மேலும், அவரது வாகனத்தில் "நெவர் கிவ் அப்" என்ற வாசகமும் இடம் பெற்று இருந்தது. இது சர்ச்சைக்குக் காரணமில்லை

பைக்
அஜித்தின் படங்களில் அவரது பைக் எண்ணும் தெளிவாக தெரியும்படியே இருந்தது. பைக் எண்ணை வைத்துக் கொண்டு இணையத்தில் செர்ச் செய்த நெட்டிசன்கள் பல தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த பிஎம்டபிள்யூ பைக் சென்னை தெற்கில் நவம்பர் 2019இல் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. அஜித்குமாரின் பெயரில் தான் இந்த பைக் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது.

இன்சூரன்ஸ்
இருப்பினும், பைக்கிற்கான இன்சூரன்ஸ் ஏற்கனவே முடிந்துவிட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. பைக் இன்சூரன்ஸ் கடந்த 2020 நவம்பர் மாதமே முடிந்துவிட்டதாக அதில் தெரிகிறது. இதன் ஸ்கிரீன்ஷைட்டை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டிலேயே இன்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் தான் அஜித் லடாக் வரை சென்று இருக்கிறாரா என்றும் இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூன்றாவது முறை
அஜித் இப்போது ஹெச். வினோத் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். அந்தப் படத்திற்கு இப்போது தற்காலிகமாக ஏ.கே.61 என்று பெயரிடப்பட்டு உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக இந்தப் படத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications