பொறுங்கள்.. காலம் கனியும் போது நல்ல முடிவை எடுப்பேன்.. பொடி வச்சு பேசிய ஆனந்தராஜ்!
சென்னை: அதிமுகவில் நிறைய தவறுகள் நடப்பதால் இன்னும் பல நிர்வாகிகள் திமுகவில் இணைவார்கள் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஆனந்தராஜ் அளித்த பேட்டி: செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வை மாநில அரசு சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, தேர்வுக்கு முன் ஆடைக்கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவியர் துப்பட்டா அணிவதைத் தடுக்க கூடாது.

மாணவியர்கள்
துப்பட்டாவை பிடுங்குவதால், மாணவியர் அவமானத்துக்கு உள்ளாகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பாக மாணவியரிடம் இருந்து துப்பட்டாவை பிடுங்குவதை எதிர்த்து, வழக்கு தொடர உள்ளேன். தமிழ்நாட்டை யாருக்கெல்லாம் பிரித்து தரலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மாநிலத்தைப் பிரிக்க...
மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற பேச்சை யார் எடுத்தாலும், பதவியை துறந்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்கும் போது சொல்ல வேண்டும். இப்போது சொல்லக் கூடாது. கொங்கு மக்களை பற்றி அரசியல்வாதிகளை விட எனக்கு நன்றாக தெரியும்.

கண்
கொங்குநாடு என்பது மக்களின் உணர்வு அல்ல. மார்க்கண்டேய அணையை நம் கண்களுக்கு தெரியாமலேயே கட்டி உள்ளனர். கிருஷ்ணகிரியில் இருக்கும்
கே.பி.முனுசாமிக்கு கர்நாடக அரசு அணை கட்டியது எப்படி தெரியாமல் போனது?

விளக்கம்
கே.பி.முனுசாமி இதுகுறித்து விளக்கம் தர வேண்டும். நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரிவினை கோஷத்தை எழுப்பலாம். பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அரசியல்வாதிகள், வாயைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

அதிமுக
அதிமுகவில் என்ன தவறு நடக்கிறது என்று எனக்கு நன்றாக தெரியும். அதிமுகவில் இருந்து இன்னும் பலர் திமுகவில் இணைய காத்திருக்கின்றனர். நான் திமுகவில் இணைந்தால் அதில் என்ன தவறு? நான் திமுகவில் இணைவதா? வேண்டாமா? என்று அவர்கள் தான் விரும்ப வேண்டும்.

நல்ல முடிவு
காலம் கனியும் போது நல்ல முடிவை எடுப்பேன். தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி மேகதாது அணையைக் கட்டுவதைத் தடுக்க வேண்டும். இயக்குநர்களுக்கு கற்பனை சுதந்திரம் தேவை. ஒளிப்பதிவு திருத்த சட்டத்தில் நிறைய தவறு உள்ளது என்றார்.
-
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications