ஜிவி பிரகாஷுமா.. அமித்ஷாவுடன் சென்னையில் “டின்னர்”.. அந்த 24 சினிமா, அரசியல் பிரமுகர்கள் யார்?
சென்னை: தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட 24 பிரபலங்களுக்கு நட்சத்திர விடுதியில் இரவு விருந்து அளித்து பேசினார். யார் அந்த பிரபலங்கள்? விரிவாக பார்ப்போம்.
2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக பிரமுகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

பாஜக தலைவர்களின் வரவேற்பை விமான நிலையத்தில் ஏற்றுக்கொண்ட அமித்ஷா, அங்கிருந்து கிண்டி தனியார் நட்சத்திர விடுதி நோக்கி காரில் ஏறி புறப்பட்டார். அவருக்கு சாலையில் இரு புறங்களிலில் நின்ற பாஜக தொண்டர்கள் கட்சிக் கொடிகளுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது திடீரென காரில் இருந்து கீழே இறங்கிய அமித்ஷா தொண்டர்கள் சிலரிடம் பேசினார். இதனால் அங்கிருந்த பாஜகவினர் உற்சாகமடைந்தனர். சிறிது நேரம் கழித்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித்ஷா, சினிமா, விளையாட்டு, அரசியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 24 முக்கியஸ்தர்களை சந்தித்து இரவு விருந்து அளித்தார்.
இந்த இரவு விருந்தில் சினிமா துறையை சார்ந்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், இயக்குநர், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளருமான அபிராமி ராமநாதன், தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் ஏஆர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த இரவு விருந்தில் கலந்துகொண்டனர். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் அமித்ஷாவின் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர்களான விஜய் குமார் ரெட்டி மற்றும் பிரீதா ரெட்டி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஆற்காடு நவாப்களான முஹம்மது அப்துல் அலி மற்றும் முஹம்மது ஆசிப் அலி, அதேபோல் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அப்போலோ டெண்டலை சேர்ந்த ஜிஎஸ்கே வேலு, ஓஎச்எல் தாஜ் குழுமத்தின் பிரமோத் ராஜன், உள்ளிட்ட பலர் அமித்ஷாவுடன் இந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு உரையாடினர்.
அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் உரிமையாளர் சீனிவாசன், இந்தியா சிமெண்ட்சை சேர்ந்த பிஎஸ் ராஜன், தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன், பத்மஸ்ரீ விருது பெற்ற அனிதா பால்துறை, செட்டிநாடு சிமெண்ட் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, டேப்லட்ஸ் இந்தியாவின் ஜெய் கிஷன் ஜவீர், பிகேஎஃப் இன் சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டார்கள்.
இதற்கு முன்பாக கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் கன்னட திரை பிரபலங்களான கேஜிஎப் யஷ், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பலரை சந்தித்து பேசி இருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே கூறப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications