இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கட்சிக் கொடியை மக்களிடம் சேர்ப்பது எப்படி? விஜய் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார். ஐயாயிரம் பேர் முன்னிலையில் கட்சியின் கொடியை அவர் வெளியிடும் நிலையில் அதனை பிரபலமாக திட்டம் ஒன்றை அவர் வைத்திருப்பதாகவும் இதன் காரணமாகவே மாநாட்டுக்கு முன்னதாக அவசர அவசரமாக கொடியை வெளியிடுவதாக கூறுகின்றனர் அவரது கட்சியினர்

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகரான விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அரசியலில் முழு கவனத்தை செலுத்தும் வகையில் நடிப்பை விட்டு விட்டு முழுவதும் அரசியலிலேயே பயணிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

Vijay Tamilaga Vettri Kazhagam Politics

ஹெச்.வினோத் இயக்கத்தில் படத்தில் கடைசியாக விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு முதன்முறையாக விஜயை வைத்து இயக்கி இருக்கும் தி கோட் படம் வெளியாக இருக்கிறது.

அதன் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஒரே நாளில் 35 மில்லியன் வியூவ்ஸ்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது படக் குழு. இந்த நிலையில் செப்டம்பர் இறுதி வாரத்தில் விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இதையடுத்து அந்த மாநாடு மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

மாநாட்டில் கட்சியின் கொடி, கொள்ளைகளை விஜய் அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பல நாட்கள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதியான நாளை விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையூரில் இதற்காக பிரம்மாண்ட கொடிமரம் அமைக்கப்பட்ட நிலையில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது.

ஆனால் அது கட்சியின் கொடி அல்ல ஒரு சம்பிரதாய நிகழ்வுக்காக அந்த கொடி ஏற்றப்பட்டது. மேலும் இதற்கு பிறகு ஜாதக விவகாரங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்குள்ளாக தனது கட்சியின் கொடியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் வெளியிடுகிறார் விஜய். இதில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அவசர அவசரமாக விஜய் கட்சி கொடியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என கேட்டபோது பல தகவல்கள் கிடைத்தது. சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட போதும் கட்சிக்கொடியை அறிமுகம் செய்தால் ஒரு சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் சென்று விடும். விஜய் ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் உடனடியாக அதனை செய்து விட முடியும்.

ஆனால் சாதாரண மக்களுக்கு கொடியை எப்படி கொண்டு செல்வது என திட்டமிட்ட விஜய் பட ரிலீசுக்கு முன்னதாக கொடியை வெளியிட்டால் தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ரசிகர்கள் அந்த கொடியை கட்டுவார்கள். படத்தின் வெளியிட்டீன் போது முதல் மூன்று நாட்களுக்கு ரசிகர்கள் கூட்டமே அதிகரித்திருக்கும். அதற்குப் பிறகு மக்கள் கூட்டம் வரத் தொடங்கும்.அவ்வாறு மக்கள் வரும்பொழுது அந்த கொடியை பார்க்கும் போது எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம் என விஜய் திட்டமிட்டதாகவும் இதன் அடிப்படையிலேயே பட வெளியீட்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெளியிடுவதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+