ட்விட்டரில் போடுவதற்கு முன்னரே.. விஜய்யின் நெய்வேலி செல்பியை பார்த்த முதல் நடிகர் இவர்தானாம்!
சென்னை: விஜய்யின் நெய்வேலி செல்பி புகைப்படத்தை ட்விட்டரில் போடுவதற்கு முன்னரே முதலில் பார்த்த நடிகர் யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. இந்த படப்பிடிப்பு அங்கு நடக்கக் கூடாது என பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்பு செல்வனின் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. இதையடுத்து விஜயிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முற்பட்டனர்.

நெய்வேலி
அப்போதுதான் அவர் மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்தார். அங்குச் சென்ற வருமான வரித் துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்த அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியிலேயே அழைத்துச் சென்றனர். எனினும் அவரது வீட்டிலிருந்து எதையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றவில்லை என அவர்களே தெரிவித்தனர்.

வருமான வரித் துறை
பாஜகவினர் போராட்டம், விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு உள்ளிட்டவற்றால் பரபரப்பு அடைந்த நிலையில் ரசிகர்கள் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்த விஜயை பார்க்கச் சென்றனர். நாள்தோறும் விஜயை பார்க்க ரசிகர்கள் நெய்வேலிக்கு படை எடுத்தனர்.

ட்விட்டர்
இதையடுத்து ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு திக்குமுக்காடிய விஜய் படப்பிடிப்பின் கடைசி நாளன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பஸ் மீது ஏறி அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

பன்மடங்கு மகிழ்ச்சி
அதில் நன்றி நெய்வேலி என குறிப்பிட்டு ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அதை ரசிகர்கள் ரீட்வீட் செய்ததால் 2020ஆம் ஆண்டில் மிகவும் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக அது பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பன்மடங்கு மகிழ்ச்சி அடைந்துவிட்டார்கள்.

அர்ஜுன் தாஸ்
இந்த நிலையில் இந்தப் புகைப்படத்தை முதன்முதலில் பார்த்தது நான்தான் என பெருமையுடன் சொல்கிறார் மாஸ்டர் நடிகர் அர்ஜுன் தாஸ். சமூக வலைதளங்களில் பரவியதும் அந்த செல்பியை பார்க்க நான் ஆசைப்பட்டதாகவும் மறுநாள் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யிடம் சென்று அந்த செல்பியை தனக்கு காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

முதலில் பார்த்தவர்
அப்போது விஜய் தனது செல்போனில் இருந்து அந்த புகைப்படத்தை காட்டியதாக சொல்கிறார் அர்ஜுன் தாஸ். எனவே விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் செல்பியை பதிவு செய்யும் முன்னரே அர்ஜுன் தாஸ் பார்த்துவிட்டதாக பெருமிதம் பொங்க தெரிவித்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications