ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனி பெண் புகார்.. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் ஆர்யா. பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து அமேசான் ஓ.டி.டி.யில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Recommended Video

    ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனி பெண் புகார்.. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்!

    இதற்கிடையே ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்,, நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் நெருங்கி பழகியதாகவும் அவ்வப்போது ஆன்லைன் முறையில் தன்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாகவும் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தார்.

    Actor Arya appeared at the Chennai Police Commissioners Office after a German woman complained

    இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையின்போது நீதிபதிகள் ஆர்யாவின் மீதான புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்களைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து ஜெர்மனி பெண் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் நடிகர் ஆர்யா மத்திய குற்றப்பிரிவு போலிசார் முன்பு இன்று ஆஜரானார். குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் கீதா நடிகர் ஆர்யாவிடம் ஜெர்மனி பெண் புகார் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளார். நடிகர் ஆர்யா தன்னை விட 17 வயது இளையவரான நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+