எடப்பாடி எவ்ளோ பெரிய ஆளு.. அவரை இப்படி பேசலாமா? ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக கொதித்தெழுந்த தாடி பாலாஜி
சென்னை: அண்ணாமலை சார் இருந்தாலாவது கூட்டணி சேர்ந்து இருப்பார்கள். இவர் கூட யார் கூட்டணி சேருவார் என்று ஒருமையில் பேசுகிறார். ஆனால் இவருக்கு (ஆதவ் அர்ஜுனா) ஒரு மேடை கிடைத்தால் மரியாதை என்றால் என்ன? எப்படி மதிக்க வேண்டும் என்று பேசுவார் என்றும், அப்போது இப்படி பேசக்கூடாது என்று புஸ்சி ஆனந்த் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா எனவும் தாடி பாலாஜி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்று தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கிண்டல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடியை நம்பி
ஆதவ் அர்ஜூனாவும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் புல்வெளியில் பேசியபடியே நடந்து செல்லும் ஒரு வீடியோ பரவியது. அதில், ஆதவ் அர்ஜூனா தமிழக அரசியல் கூட்டணி தொடர்பாக பேசுகிறார். ஆதவ் அர்ஜூனா கூறுகையில், , 'அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு, தேர்தலில் நின்னு 18, 20 சதவீதம் வாக்கு வங்கி வச்சிருக்காரு, இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வர்ற மாதிரி தெரியல" என்று சொல்லிக்கொண்டு வருகிறார்.
ஆதவ் அர்ஜூனா இவ்வாறு கூற புஸ்சி ஆனந்த் பதில் ஏதும் கூறாமல் சிரித்துக்கொண்டே ம்.. ம் என சொல்லிக் கொண்டே வருகிறார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமியை மரியாதையின்றி பேசியதாக பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜியும் ஆதவ் அர்ஜூனாவையும், புஸ்சி ஆனந்தையும் சாடியிருக்கிறார். தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
தாடி பாலாஜி வீடியோ
விஜய் அவர்கள், மாணவர்களுக்கு பரிசு கொடுத்து இருக்கிறார். அந்த மேடையில் விஜய் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார். அந்த மேடையில் பரிசு வாங்கிய குழந்தைகளும் சரி. பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். விஜய் வரவேண்டும்.
விஜய் வந்தால் நிறைய விஷயங்கள் நடக்க வேண்டும் என்று மேடையில் பேசியதை நீங்க கேட்டீங்க.. இப்படி ஒரு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. சந்தோஷமான தருணத்தில் இன்று ஒரு வீடியோ வந்துள்ளது. அது என்னவென்று கேட்டீங்கன்னா.. அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தவெக முக்கிய பொறுப்பு வகிப்பவர்.. போன உடனே பொறுப்பு கொடுக்கப்பட்டவர் பேசுகிறார்..
இப்படி பேசக்கூடாது என சொல்ல வேண்டும்
அண்ணாமலை சார் இருந்தாலாவது கூட்டணி சேர்ந்து இருப்பார்கள். இவர் கூட யார் கூட்டணி சேருவார் என்று ஒருமையில் பேசுகிறார். ஆனால் இவருக்கு ஒரு மேடை கிடைத்தால் மரியாதை என்றால் என்ன? எப்படி மதிக்க வேண்டும் என்று பேசுவார். அதற்கு கைதட்டலும் வாங்குவார். இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது கூட வருகிறார் அவர் எவ்வளவு பெரிய நபர். தவெகவின் பொதுச்செயலாளர்..
அப்போது இப்படி பேசக்கூடாது என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும் இல்லையா... ஆதவ் அர்ஜுனா அதிமுகவிற்கும் பணியாற்றியுள்ளார். திமுகவிற்கும் பணியாற்றியுள்ளார். அப்படி இருகும் போது நீங்க பொதுவாக பேசும் போது மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்கிறீர்களே... அந்த வாய்ஸ் என்னாச்சு.. காமனாக (பொதுவாக) சொன்னீங்களா... எப்படி சொன்னீங்க என்று எனக்கு புரியவில்லை.
விஜய்க்கு ஒரு வேண்டுகோள்
முதலில் ஒரு கட்சி.. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கு.. அதற்குள் நீங்கள் இப்படி செய்தீர்கள் என்றால் இது தலைமைக்கும் தலைவருக்கும் கெட்டப்பெயரை ஏற்படுத்தாதா? இல்லையா?.. அதை மட்டும் நீங்கள் சொல்லுங்கள். என்ன நீங்க என்னமோ சாதித்துவிட்டது போல இன்னொருத்தரை விமர்சிக்கிறீர்கள். அதெல்லாம் பண்ணுறீங்க.. மிகப்பெரிய தவறுங்க.. இப்பவும் சொல்கிறேன். எப்படியும் ஒருநாள் தவெக தலைவரும் எனது நண்பருமான விஜய்யிடம் இருந்து ஒரு அழைப்பு வரும்.
அப்போது தெரிஞ்சுக்கோங்க அவருக்கு விசுவாசமாக எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்... விஜய்க்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான். இதையெல்லாம் நீங்கள் நேரடியாக கூப்பிட்டு தீர்வு காணுங்கள். யாராக இருந்தாலும் கண்டியுங்கள். சில விஷயங்களை உங்க கண் முன்னாடி கையாண்டு தீர்வு காணுங்கள்" இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி விருது விழா
மாமல்லபுரத்தில் தவெக கல்வி விருது விழா கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த 29-ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது, இருவரும் பேசிக்கொண்டு செல்லும் போது, எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜூனா மரியாதையின்றி பேசியதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதை பலரும் கண்டித்து வரும் நிலையில், நடிகர் தாடி பாலாஜியும் வீடியோ வெளியிட்டு கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications