சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் முழுவதும் குணமடையவில்லை.. விஜய் தேவரகொண்டா தகவல்
சென்னை: நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
தமிழில் ஈ படத்தில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. இந்த படம் வெற்றி பெறவே சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அவர் பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால் தூக்கத்தில் இருந்து கூட எழுந்திருக்க முடியாத நிலை இருந்ததாக சமந்தாவே தெரிவித்திருந்தார்.
இதனால் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் இருந்தார். ஒரு கட்டத்தில் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களில் இருந்தும் விலகி வந்தார். இதனால் சினிமா தொழிலும் சமந்தாவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இத்தனைக்கு முன்னணி நடிகையாக இருந்தவர். பின்னர் மயோசிடிஸ் நோய்க்காக அவர் 5 மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து உடல்நலம் சற்று தேறியவுடன் தான் ஒப்புக் கொண்ட படங்களில் நடித்தார். குஷி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த படக் குழுவினர் சமந்தாவின் உடல் நிலை குணமாகும் வரை அப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தாமல் இருந்தனர். தற்போது இந்த ஆண்டு சமந்தாவின் உடல்நலம் தேறியதால் அந்த படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.
இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த குஷி படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா கலந்து கொண்டனர். அப்போது விஜய் தேவரகொண்டா பேசுகையில் குஷி படத்திற்காக சமந்தா மிகவும் கஷ்டப்பட்டார். ஒரே கட்டமாக 60 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
இந்த நிலையில் ஜூலை மாதம் சமந்தாவின்உடல்நிலை மோசமானது. உடல் நிலை சரியில்லை என சொன்ன போது கூட அவர் அழகாக இருந்தார். அவர் உடல் நிலை சரியில்லை என சொன்ன போதெல்லாம் நாங்கள் (படக்குழு) சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் அவரது பிரச்சினைகளை வெளிப்படையாக பேசிய பிறகுதான் அதன் தீவிரம் புரிந்தது.
மயோசிடிஸ் நோயால் ஒரு கட்டத்தில் எங்களிடம் கூட சமந்தா பேசவில்லை. அந்த அளவுக்கு அவர் கடும் வேதனையை அனுபவித்துள்ளார். இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லை. இங்கிருக்கும் லைட்டுகளால் அவருக்கு தலை வலி ஏற்படும். இருந்தாலும் சிரித்த முகத்துடன் அவர் படத்தை நடித்து கொடுத்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications