நடிகர் தனுஷ் - திருமா திடீர் சந்திப்பு.. பார்த்துமே கொடுத்த ரியாக்ஷன் இருக்கே.. அடடே! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திடீரென்று நடிகர் தனுஷூம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனும் சந்தித்து பேசினர். எதிர்பாராத வகையில் நடந்த இந்த சந்திப்பின்போது பார்த்ததுமே இருவரும் கொடுத்த ரியாக் ஷன் தற்போது வீடியோவாக பரவி வருகிறது.

வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் தான் ஐசரி கணேஷ் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தனது 58 வது பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாடினார்.

thirumavalavan dhanush vck

இந்த விழாவில் சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல துறைகளை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர். இந்த பிரபலங்கள் ஐசரி கணேஷின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்றார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனும் பங்கேற்றார். விழா நடத்தும் இடத்துக்கு திருமாவளவன் வந்தபோது எதிரே நடிகர் தனுஷ் நடந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். இதையடுத்து இருவரும் புன்முருவல் செய்து கைக்குலுக்கி கொண்டனர்.

அதன்பிறகு இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சந்திப்பு என்பது ஒரு நிமிடத்துக்குள் நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் இருவரும் திடீரென்று சந்தித்து கைக்குலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்ததை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

thirumavalavan dhanush vck

மேலும் இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாள் சீமான், தயாரிப்பாளர் தாணு, இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரபு தேவா, ஜெயம் ரவி, ஜீவா,விஷ்ணு விஷால், ஆர்யா பங்கேற்றனர். அதேபோல் நடிகைகள் ராதிகா, மீனா, சங்கீதா பங்கேற்றனர். இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ், பாடகர் கிருஷ் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.

தொகுப்பாளர் மாகாபா மீது வழக்குப்பதிவு! அந்த நிகழ்ச்சியால் வந்த பிரச்சனை.. சிக்கும் 50 பேர்!
ஐசரி கணேஷ் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற சொந்த நிறுவனம் மூலம் சினிமா படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், ஜெயம் ரவி நடித்த போகன், கோமாளி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+