தொகுப்பாளர் மாகாபா மீது வழக்குப்பதிவு! அந்த நிகழ்ச்சியால் வந்த பிரச்சனை.. சிக்கும் 50 பேர்!
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகாபா உட்பட 50 பேர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முறையாக அனுமதி வாங்காத காரணத்திற்காக புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கும் மாகாபா திருச்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு முறையான அனுமதி வாங்காமல் ரோட்டில் பிரம்மாண்டமாக செட் போட்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கும் போது உடற்பயிற்சிக்கு விழிப்புணர்வு செய்ய போகிறோம் என்று அனுமதி வாங்கிவிட்டு ஸ்ட்ரீட் டே கொண்டாடப்பட்டதாகவும் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டதால் பலர் ஏமாந்து திரும்பி போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மாகாபாவும் ஒருவர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளர் மாகாபாவிற்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த வாரத்தில் தான் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சினைக்கு இடையே ஒரே ஒரு போஸ்ட் போட்டு இணையத்தில் அதிகமாக வாங்கி கட்டிக் கொண்டார்.
மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போது காட்டுக்குள் ரெண்டு யானைகள் அடித்து கொண்டு இருந்தால் நாம் அந்த பக்கமாக போய் அந்த சண்டையை விலக்கிவிடக்கூடாது, விலகி போய்விட வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசி இருந்தார்.

ஆனால் சில தினங்களில் மணிமேகலை தன்னுடைய வீடியோவில் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்பவர்களை சொம்பு என்று பேசி இருந்தார், அதற்கு சொம்பு என்று சொன்னால் நாங்கள் செருப்பை காட்டுவோம் என்று மாகாபா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற நிகழ்ச்சியை மாகாபா தான் தொகுத்து வழங்கி இருந்தார். அப்போது கூட மாகாப்பா நான் சமீபத்தில் செருப்பாலும் அடி வாங்கியாச்சு செருப்ப வச்சு போஸ்ட் போட்டும் அடி வாங்கியாச்சு என்று கிண்டலாக சொல்லி இருந்தார். இந்த நிலையில் இப்போது இவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications