ஐஸ்வர்யா, மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் தனுஷ்.. நெகிழ்ச்சியுடன் போட்ட பதிவு
சென்னை: நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தனது உயர்கல்வியை நிறைவு செய்துள்ளர். இதற்காக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து மகனுடன் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் இன்று தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகன் யாத்ரா சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தனுஷ் அப்பொது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

பெருமை மிக்க பெற்றோர் என்று பதிவிட்டு இருந்த தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் தனது மகனை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு தனது மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து தனுஷ் விவகாரத்து பெற்ற நிலையில், தற்போது மகனுக்காக இருவரும் இணைந்து ஒன்றாக புகைப்படம் எடுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து உள்ளது.
ஐஸ்வர்யா மற்றும் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த தனுஷ் proud parents என கேப்ஷன் போட்டு உள்ளார். இந்த பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிறந்த பெற்றொராக தனுஷ் இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பை யாத்ரா முடித்து உள்ளார். தனது படிப்பை முடிவு செய்த பிறகு நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி, பரஸ்பரம் பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்த வந்ததாக இவர்கள், பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
அதோடு 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்தும் நீதிபதி சுபாதேவி உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் தனுஷ் - ஐஸ்வர்யாவின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications