வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்! பெண் வன்கொடுமை செய்பவரை பாதுகாத்தால் என்ன பேரு தெரியுமா? நறுக் ட்வீட்
சென்னை: தமிழக பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் இடைவிடாமல் அக்கட்சியின் தலைமையை விமர்சித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தமிழக பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக தலைமையுடன் தொடர்ச்சியாக மல்லுக்கட்டி வருபவர் நடிகை காயத்ரி ரகுராம். இதனால் காயத்ரி மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தது.

தொடர் விமர்சனம்
தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றத்தின் போதும் காயத்ரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் ஒப்புக்கு சப்பாணியாக ஒரு போஸ்டிங்கை வாங்கிக் கொண்டு திருப்தி அடைந்தார். ஆனால் கமலாலயத்தில் சிவப்பு கம்பள விரிப்பு எல்லாம் காயத்ரிக்கு கிடைக்காலம் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால் அவ்வப்போது கட்சி தலைமையை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவு செய்தார்.

கட்டம் கட்டப்பட்ட காயத்ரி
இந்த நிலையில்தான் திருச்சி சூர்யா-டெய்சி ஆபாச ஆடியோ விவகாரம் பெரும் பிரளயமாக வெடித்தது. இதில் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக குரல் கொடுத்தார் நடிகை காயத்ரி. இதனை சாக்காக வைத்து பாஜகவில் இருந்து தற்காலிகமாக காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதனால் காயத்ரி ரொம்பவே கொந்தளித்துப் போனார்.

டெல்லி மேலிடம்
தம் மீதான இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வைக்க டெல்லியின் கதவுகளை இடைவிடாமல் தட்டிப் பார்த்தார்ல் காயத்ரி ரகுராம். எந்த ஒரு டெல்லி சேனலும் காயத்ரி ரகுராமுக்கு க்ரீன் சிக்னலே தரவில்லை. டெல்லி மேலிடத்துக்காக இப்படி படாதபாடுபட்டுக் கொண்டிருந்த காயத்ரி ராகுராமுக்கு மற்றொரு அதிர்ச்சியும் தரப்பட்டது.

தீனா நியமனம்
தமிழக பாஜகவின் வெளிநாட்டு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தீனா நியமிக்கப்பட்டார். அதாவது காயத்ரி ரகுராம் வகித்த பதவியில் இசை அமைப்பாளர் தீனா நியமிக்கப்பட்டார். இதனை காயத்ரி தரப்பால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். தீனாவின் நியமனம் மூலம், பாஜகவில் இனி காயத்ரி இடமே இல்லை என்கிற நிலைமையும் உருவாகிவிட்டதாகவே செய்திகள் பரவின.

பஞ்ச் டயலாக் ட்வீட்
ஒட்டுமொத்தமாக இப்படி தமிழக பாஜக தமக்கு எதிராக இருக்கும் நிலையில் அக்கட்சிக்கே முழுக்கு போட்டுவிட்டு வேற கட்சிக்கு மாறும் ஐடியாவில் கூட இருக்கிறாராம் காயத்ரி. இப்படியான தகவல்கள் வலம் வரும் நிலையில், திருடனைப் பாதுகாத்தால் நீயும் திருடன்தான். ஒரு ஊழல்வாதியைப் பாதுகாத்தால், நீயும் ஊழல்வாதிதான். கொலைகாரனை பாதுகாத்தால் நீயும் கொலைகாரன் தான். ஒரு பெண் வன்கொடுமை செய்பவரைப் பாதுகாத்தால்? என ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் யாரை விமர்சிக்கிறார் என்பதே இப்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் காரசார விவாதமாக உருவெடுத்துள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications