உயிர்பிழைத்தது எப்படி? முகத்தில் நடந்த அறுவை சிகிச்சை! உருக்கமாகப் பேசிய ஜனகராஜ்!
சென்னை: தனக்கு ஏற்பட்ட விபத்தில் முகம் ஒரு பக்கம் சிதைந்து போய்விட்டது என்று நடிகர் ஜனகராஜ் கூறியுள்ளார்.
சில நாள்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் நடிகர் ஜனகராஜ், ஒரு ஆட்டோ டிரைவர் உடையில் உருக்குலைந்து போன தோற்றத்திலிருந்த புகைப்படம் வைரலாகி வந்தது.

பலரும் அந்தப் படத்தை எடுத்துப் போட்டு, 'இவருக்கு என்ன ஆச்சு?' எனக் கவலையாகக் கேட்டிருந்தனர்.
அதன்பின்னர் தான் அவர் நடித்த 'தாத்தா' குறும்படத்தில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரத்தின் புகைப்படம் என்பது பலருக்கும் தெரியவந்தது.

ஜனகராஜ் திரைப்படங்களில் தோன்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் நடிக்காத இருந்த காலங்களில் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள். ஆனால், இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் சைலண்ட் ஆக தன் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனாலும் ஜனகராஜ் என்ற நடிகரைப் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் மறக்கவே இல்லை. இன்றைக்கும் 'என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா' காமெடி காட்சியை மீம்ஸ் ஆகப் பயன்படுத்தி வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

அதைப்போல 'என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா' காமெடியை தமிழ் சினிமா உள்ளவரை யாராலும் மறக்கவே முடியாது. காமெடி காட்சிகளுக்கு இணையாக அவர் கேரக்டர் ரோல்களிலும் கலக்கி இருக்கிறார்.
அப்படிப்பட்ட மனிதருக்கு என்ன ஆனது என்றுதான் அந்த ஆட்டோ டிரைவர் உடையிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள் கவலை அடைந்தனர்.

ஆனால், ஜனகராஜ் எப்போதும் போல் நன்றாகத்தான் இருக்கிறார். இந்தப் புகைப்படம் வைரலான பிறகு அவர் ஒரு யூடியூப் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்
நடிகர் ஜனகராஜ் தனது பேட்டியில், "எங்க அப்பா அம்மா வைத்த பெயரே ஜனகராஜ்தான். 4ஆ,ம் வகுப்பு வரை இதே தேனாம்பேட்டை மாநகராட்சி பள்ளியில்தான் படித்தேன். அதற்கு அப்புறம் பனகல் பூங்கா பக்கம் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தேன்.

அங்கு 12 ஆம் வகுப்பு முடிந்த உடன், அப்பா காலேஜ் சேர்த்துவிடுவார் என நினைத்தேன். ஆனால் சேர்க்க மறுத்துவிட்டார். 'படித்தது போதும், வேலைக்குப் போ' என்று சொல்லிவிட்டார்.
நான் முதலில் 3 வேலைகளைச் செய்தேன். விவசாயம் செய்வதற்காக போர்வெல் போடுவார்கள். அந்த வேலை பார்த்தேன்.
அடுத்து பிளாஸ்டிக் பைப் உள்ளே இறக்குவார்கள். அந்த பைப் அளவு பார்த்து வெட்டிக் கொடுக்கும் வேலைக்குப் போனேன். அந்த வேலை ஒரே வாரத்தில் முழுக்க அத்துப்படி ஆகிவிட்டது.

எனக்கு சினிமாவில் இசைத்துறையில் போய் சேர வேண்டும் என்பது ஆசை. அதை அங்கே உள்ளவர்களிடம் சொன்னேன். 'சரி, சம்பளம் வாங்கிக் கொண்டு போய்விடு' என்றார்கள். ஒரு வாரம்தான் அந்த வேலை பார்த்தேன்.
அடுத்து ஜெமினி லேப் அலுவலகத்தில் கலர் செக் செய்கின்ற பிரிவில் ஒரு 4 வாரம் வேலை பார்த்தேன். அதன்பிறகு அதையும் விட்டு விட்டேன்.
எங்கள் வீட்டில் சில வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். அதில் சில சினிமாக்காரர்கள் குடியிருந்தார்கள். எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் பாரதிராஜா குடியிருந்தார். அவருடன் எனக்குப் பழக்கம் இருந்தது. அவர்களும் சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டிருந்த காலம்.

அப்போது அவர்களுடன் சேர்ந்து நாடகம் போடத் தொடங்கினேன். அப்படியே 'கிழக்கே போகும் ரயில்', 'சுவரில்லாத சித்திரங்கள்', 'கல்லுக்குள் ஈரம்' என வெளிவந்தது. அதில் 'பாலைவன சோலை' தான் என்னைப் பிரபலமாக்கியது.
'பாலைவன சோலை'க்குப் பிறகு அடுத்த படத்திற்காக வெளியூருக்கு ஷூட்டிங் போய் இருந்தோம். வரும்போது யாரோ எங்கள் வாகனத்தை நோக்கி கல்லைவிட்டு அடித்தார்கள். அந்தக் கல் என் முகத்தைப் பதம் பார்த்துவிட்டது. அப்போது போனதுதான் என் முகத்தோற்றம்.
எனக்கு முகத்தில் என்ன அடித்தது என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு நிதானம் இல்லை. அப்படி ஒரு அடி. அந்த அடி கொடுத்த வலியை இன்றைக்கும் மறக்க முடியாது. அந்தளவுக்கு அவஸ்தைப்பட்டுவிட்டேன்.
பின்னால் காவல்துறை அதிகாரிகள் சில ரிப்போர்ட் எடுத்துக் கொண்டு வந்து என்னைப் பார்த்தார்கள். அந்த ஊரில் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மீது இப்படி சிலர் கல்லெறிவார்களாம். அது டிரைவர் மீது பட்டால், அவர் வாகனத்தை நிறுத்துவார். அப்போது வண்டிக்குள் உள்ள நபர்களிடம் உள்ள பொருட்களை அடித்து பிடித்துக் கொண்டு அந்தக் கும்பல் ஓடி விடுமாம். அப்படிப்பட்ட ஏதோ ஒரு கும்பல் எறிந்த கல் என் முகத்தை உடைத்துவிட்டது.
உடனே சென்னையில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு வந்து நர்ஸ், 'எழுந்து போய் கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது' என்றார்.
எனக்கு அதன்பிறகுதான் சந்தேகம் வந்தது. உடனே கண்ணாடியில் போய் பார்த்தால் ஒரு பக்கம் முகம் பூதாகரமாக வீங்கிப் போய் உள்ளது. இனிமேல் சினிமா வாழ்க்கையே காலி என்று முடிந்துவிட்டது என்று நினைக்கத் தொடங்கி விட்டேன்.
முகம் போய்விட்டது. பல் ஒரு பக்கம் முழுக்க கொட்டி விட்டது. தாடை எலும்பு உடைந்துவிட்டது. அதை எல்லாம் அறுவை சிகிச்சையில் சரி செய்தார்கள். சில மாதங்கள் படுத்தப்படுக்கையாகவே கிடந்தேன்.
அப்போதுதான் பாரதிராஜா வந்தார். 'என் அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ. ராதாவுக்கு நீதான் ஜோடி' என்றார். எனக்கு நம்பிக்கையே இல்லை. முகம் முழுக்க கட்டு. திரும்ப நடிக்க முடியுமா? என தயக்கம். அப்பதான் 'காதல் ஓவியம்' வாய்ப்பு வந்தது. என்ன மாதிரியான படம் அது.
இப்ப நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கு" என்கிறார்
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications