பனையூர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா ஜெயம் ரவி? போலீஸ் விசாரணையில் ஆர்த்தி கூறிய பகீர் தகவல்
சென்னை: தன்னை தனது சென்னை பனையூர் வீட்டிலிருந்து ஆர்த்தி, வெளியேற்றிவிட்டதாக ஜெயம் ரவி, போலீஸில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் பேரில் ஆர்த்தி இருக்கும் பனையூர் வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரித்த போது ஆர்த்தி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாகவும் தன்னை சார்ந்தவர்களின் நலம் கருதி இந்த கசப்பான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு என ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதிதான் கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த அறிக்கை விட்ட அடுத்த இரு நாட்களில் தனக்கு எதுவுமே தெரியாது என ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையிலும் ஆர்த்தி மீது தேவையில்லாத வதந்திகள் பரவின.
பிறகு ஜெயம் ரவிக்கு கோவாவை சேர்ந்த கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியுடன் தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனால்தான் ஜெயம் ரவி, ஆர்த்தியை பிரிகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பிரதர் படத்தின் புரமோஷனுக்காக ஜெயம் ரவி வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கெனவே இரு நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறேன்.
அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தனக்கு தெரியாது என அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக எதிர் கொள்வேன். எனக்கும் கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அதை பேசியவர்களுக்குத்தான் அசிங்கம்.
அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை அவர் மீட்டெடுத்துள்ளார். அவருடன் ஒரு ஹீலிங் மையம் தொடங்கவுள்ளேன் என அவர் தெரிவித்திருந்தார். அது போல் கெனிஷாவும் , நானும் நட்புடன்தான் பழகுகிறோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தன்னை பனையூர் வீட்டிலிருந்து ஆர்த்தி வெளியேற்றிவிட்டதாக போலீஸில் ரவி புகார் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆர்த்தியுடனான பிரிவை அறிவிப்பதற்கு முன்பே இது போல் ஒரு புகாரை கொடுத்தாராம்.
மேலும் தனது கார், தனக்கு சொந்தமான பொருட்களை எல்லாம் தன்னால் எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் அவர் புகாரில் தெரிவித்திருந்தாராம். ஜெயம் ரவியின் புகார் தொடர்பாக ஆர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்த சென்றார்களாம். அப்போது ஆர்த்தி, "ஏன் சார் நீங்கள் என் வீட்டிற்கு வந்தீங்க. நாங்கள் கதவை பூட்டி வைத்திருந்தோமா என்ன? வீட்டின் வாசலில் கூட ரவி ஆர்த்தி என்றுதானே போட்டிருக்கிறது.
நான் ஏன் அவரை வெளியே அனுப்பப் போகிறேன். இது அவருடைய வீடு. அவர் இங்கு தாராளமாக வரலாம் என்றாராம். ஆர்த்தியின் இந்த பதிலை கேட்ட போலீஸார் யார் சொல்வது உண்மை என்பது தெரியாமல் குழம்பி போயிருக்கிறார்களாம். ஆர்த்தி குறித்து போலீஸில் ஜெயம் ரவி புகார் கொடுத்துள்ளது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஜெயம் ரவி தனது விவாகரத்து முடிவிலிருந்து பின்வாங்குவதில்லை என்றும் ஆர்த்தி விவாகரத்து கொடுக்கப் போவதில்லை என்றும் பிடிவாதமாக இருக்கிறார்களாம். இதற்கு என்னதான் தீர்வு என தெரியாமல் இரு தரப்பை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களு் தவித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications