Joju George: மூணாறு ஷூட்டிங்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து! ஜோஜு ஜார்ஜ் உள்பட 6 பேருக்கு காயம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறு பகுதியில் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரவு எனும் திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மூணாறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் த்ரில்லர் மூவியாக திகழும் என்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லக்கம் அருகே நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஜீப்பில் ஜோஜு செல்வது போல் படமாக்கப்பட்டது. மலை பாதை போன்ற இடத்தில் ஜீப்பை ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜ், நடிகர் தீபக் பரம்போல் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அது போல் சண்டை பயிற்சி கலைஞருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மூணாறில் உள்ள டாடா மருத்துவமனையில் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.
இந்த படத்தில் இயக்குநர் ஷாஜி காளிதாஸுடன் ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் பின்னணி பாடகர், நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை பெற்றுள்ளார்.
இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு செகன்ட் கிளாஸ் யாத்ரா, லுக்கா சுப்பி ஆகிய படங்களுக்கு கேரள அரசின் விருதை பெற்றார். தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications