நடிகர் கமலஹாசனின் பூர்வீகம் பரமக்குடி அல்ல கர்நாடகாவின் 'ஹாசன்' - 'சாட்டை துரைமுருகன்' ஒரேபோடு!
சென்னை: உலக நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனின் பூர்வீகம் தமிழ்நாட்டின் பரமக்குடி அல்ல; கர்நாடகாவின் ஹாசன் பகுதி என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என முழு அடைப்புப் போராட்டங்கள் தொடருகின்றன. வரும் அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் போராட்டத்தை வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: கர்நாடகா போராட்டங்களுக்கு நடுவே நடிகர் சித்தார்த், சித்தா படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பை பெங்களூரில் நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்புக்குள் உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர் நிகழ்ச்சியில் ரகளை செய்தனர். இதனால் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியை ரத்து செய்ய நேரிட்டது. இந்த சம்பவத்துக்கு நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் மன்னிப்பும் கேட்டனர்; கண்டனமும் தெரிவித்தனர்.
கன்னட நடிகர்கள் ஒருவரும் இருக்க முடியாது: இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: நடிகர் சித்தார்த்தை கர்நாடகாவில் வெளியேற்றினார்கள். நடிகர் சித்தார்த்தை வெளியேற்றிய போது, அவரது நிகழ்ச்சியை தடை செய்தது போல, தமிழர்கள்- தமிழ்த் தேசியவாதிகள்- தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டில் கன்னட நடிகர்களை கன்னட இசையமைப்பாளர்களை கன்னட நடிகைகளை வெளியேற்றனும்னு நினைச்சோம்னு வை.. தமிழ்நாட்டில் ஒரு நடிகர் இருக்க முடியாது.

கர்நாடகா கமல'ஹாசன்': உலக நாயகன் என எல்லோரும் கொண்டாடினாலும் பரமக்குடிக்காரர் என சொல்லப்பட்டாலும் அவர் கர்நாடகாவைச் சார்ந்தவர்தான். கர்நாடகாவில் ஹாசன் அப்படிங்கிற ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் கமல'ஹாசன்'. திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ அப்படின்னு ஊர் பேரை அடைமொழியாக போடுவதைப் போல ஹாசன் என்பது கர்நாடகாவின் ஒரு ஊர். அந்த ஊர் பெயரைத்தான் கமலஹாசன், ஸ்ருதி ஹாசன், சாரு ஹாசன், அனு ஹாசன் என ஹாசன், ஹாசன் என ஊர் பெயரை போட்டுக் கொள்கின்றனர். அந்த கமலஹாசனை தமிழ்நாட்டில் உயர்ந்த நட்சத்திரமாக மாற்றி அழகு பார்ப்பது தமிழ்நாடு. அவங்களாவது ரொம்ப முன்னாடி வந்தவங்க.
பிரகாஷ் ராஜ், கிஷோர்: இப்ப சமீபத்தில் வந்த பிரகாஷ் ராஜ், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர். அவரை நடிக்க வைத்து அழகு பார்க்கவில்லையா? ஏன் நம்ம கிஷோர்... பொல்லாதவன், ஆடுகளம் என பல படங்களில் நடித்தவர்.. இன்று நடித்துக் கொண்டுதானே இருக்கிறார்.. இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications