மூச்சுத்திணறல்...தேர்தர் பிரசாரம் செய்த நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: மருத்துவர்களின் அறிவுரையை மீறி தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் கர்த்திக் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி படங்களில் அவ்வப்போது கௌரவ வேடங்களிலும் நடித்துவருகிறார்.

கார்த்திக் கட்சி இந்த சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார் கார்த்திக். திடீரென உடல்நிலை பாதிக்கப்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் உடல்நலம் தேறிவந்த நடிகர் கார்த்திக், சொன்ன வார்த்தையை காப்பாற்றும் விதமாக தேர்தல் பிரசாரம் செய்தார். போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்த போது, "உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி கந்தசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஞாயிறு கிழமையுடன் ஓய்ந்த நிலையில் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications