கருணாஸின் கட்சி வக்கீல்.. முகத்தில் அசையாமல் நின்ற "பொருள்".. உடம்பு பூரா தங்க நகை.. ஆடிப்போன சென்னை
சென்னை: விருகம்பாக்கத்தில் நடிகர் கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகி ஒருவரை வெட்டி கொலை செய்த வழக்கில் போலி பத்திரிக்கையாளர் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி தனிப்படையினர் சிவகங்கைக்கு விரைந்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ளது பவுல்ராஜ் குடியிருப்பு.. இங்கு வசித்து வருபவர் வெங்கடேசன்.. 38 வயதாகிறது.. இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்..

துன்னுடைய நண்பர் சேதுபதி என்பவருடன் இணைந்து கடந்த 4 மாதங்களாகவே இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.. ஆனால், கடந்த 2 நாட்களாகவே வெங்கடேசன் வீடு பூட்டப்பட்டிருந்தது.. ஆனால், வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் சந்தேகமடைந்து, இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.
கொடூரமான கொலை
போலீசாரும் விரைந்து வீட்டிற்கு வந்தனர்.. ஆனால், வீட்டின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனால் வீட்டுக்கு பின்புறம் சென்று பார்த்தால், கதவு திறந்தேயிருந்தது..
அதனால், அந்த வழியாக வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, வழக்கறிஞர் வெங்கடேசன் பெட்ரூமிலேயே ரத்த வெள்ளளத்தில் இறந்துவிட்டார்.. அவரது தலையிலும், முகத்திலும் ஆழமான வெட்டு காயங்கள் தென்பட்டன.. அவரது முகத்திலேயே வெட்டப்பட்ட கத்தி, குத்தியவாக்கிலேயே கிடந்தது..
உடல் முழுவதும் அழுகியிருந்தது.. ஆனால், உடம்பு முழுவதும் அணிந்திருந்த தங்க நகைகள், அனைத்தும் திருடுபோகாமல் அப்படியே இருந்தன.. இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. இது தொடர்பான விசாரணையையும் துவங்கினார்கள்.
சரளா தந்த போலீஸ் புகார்
இந்த சடலத்தை கைப்பற்றிய அதேநேரம், வக்கீலின் மனைவி சரளா, கணவரின் சடலத்தை கண்டு கதறி அழுதார். பிறகு விருகம்பாக்கம் போலீசில் இந்த கொலை தொடர்பாக சரளா புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.. அப்போதுதான், பிரபு, சுந்தர் இவர்கள் இருவருமே கொலை செய்யப்பட்ட வக்கீலுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்தது. போலி பத்திரிகையாளரான கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபு (37), மேடவாக்கத்தில் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கும் சுந்தர்(37) இவர்கள் இருவரிடமும் இறந்துபோன வக்எகல் அடிக்கடி பேசி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பிரபு, சுந்தரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
ரியல் எஸ்டேட் வக்கீல்
அவர்கள் இருவரும் போலீசாரிடம், "கொலையான வக்கீல் வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.. இது தொடர்பாக ரூம்மேட் கார் டிரைவர் கார்த்திக்குடன் அடிக்கடி தகராறுகள் வந்தன" என்று வாக்குமூலம் தந்தனர்.
இதையடுத்து, கார் டிரைவரை தேடும் பணி ஆரம்பமானது.. வக்கீலுடன் ஒரே ரூமில் கார்த்திக் என்ற கார் டிரைவரும் தங்கியிருந்தாராம்.. இவர் நெல்லை நாங்குநேரி பகுதியை சேர்ந்தவராம்.. 32 வயதாகிறது.. எப்போதுமே வக்கீலுடன் இருக்கும் கார்த்திக், திடீரென மாயமானதால் அவர் மீது போலீசாருக்கு ஏற்கனவே சந்தேகம் வலுத்தது.. கார்த்திக்கை பற்றி விசாரிக்கும்போதுதான், கார்த்திக் மீது ஏற்கனவே 27 கேஸ்கள் இருப்பதும், இவர் நெல்லை மாவட்ட B கேட்டகிரி கூலிப்படையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்ததுமே போலீசாருக்கு அதிகமாகிவிட்டது.
சிவகங்கையில் கார்த்திக்
தற்போது வக்கீலின் நண்பர்களும் தந்த வாக்குமூலத்தையடுத்து, கார்த்திக்கை தேடும் பணி தீவிரமானது... இறுதியில், சிவகங்கை மாவட்டத்தில் கார்த்திக் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, கார்த்திக்கை பிடிக்க அங்கு விரைந்து சென்றிருக்கிறார்கள்.
2 நாட்களுக்கு முன்புதான் வழக்கறிஞரை கார்த்திக் கொலை செய்ததாக தெரிகிறது. நண்பர்களான பிரபு, சுந்தர் இருவருமே வக்கீலுடன் சேர்ந்து தினமும் மது அருந்துவார்களாம்.. இவர்கள் மூவருமே பல்வேறு கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.. அப்படித்தான் பெரிய அளவிலான நில பிரச்சனை ஒன்று இவர்களுக்கு வந்துள்ளது.. அந்த விவகாரத்தில்தான் வக்கீலை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் கார் டிரைவர் கார்த்திக் கைதானால்தான், கொலைக்கான முழு விவரமும் தெரியவரும்.
கார் டிரைவராக பணி
ரவுடி கார்த்திக்கை பொறுத்தமட்டில், பல்வேறு இடங்களில் குற்றச்செயல்களை செய்துவிட்டு, உடனே பாதுகாப்புக்காக சென்னையிலுள்ள வக்கீல் வீட்டில் வந்து தங்கிவிடுவாராம். இதற்காகவே, வக்கீல் வெங்கடேசனிடம் கார் டிரைவராக சேர்ந்திருக்கிறார்.. மேலும் வக்கீல் வீடு என்பதால், யாரும் தன்னை சந்தேகிக்க மாட்டார்கள் என்றும் நம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன், நடிகர் கருணாஸ் நடத்தும் முக்குலத்தோர் புலிப்படையின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராகவும் இருந்துள்ளார்.. இதெல்லாம்தான் கார் டிரைவருக்கு சாதகமாக இருந்துள்ளன. எனினும், கார் டிரைவர் கார்த்திக் சிக்கினால்தான், வெங்கடேசன் கொலைக்கான நிஜக்காரணம் தெரியும்.
செருகப்பட்ட கத்தி
வழக்கறிஞர் வெங்கடேசனை கொலை செய்தால், தனக்கு எந்த பிரச்னையும் வராது, திருநெல்வேலியில் பெரிய ரவுடி தான் என்று முடிவு செய்தாராம் கார்த்தி.. வெங்கடேசன் சென்னையில் வழக்கறிஞர் தொழில், அரசியல் கட்சியில் மாநில நிர்வாக பதவியில் இருப்பதால், அவரை நேருக்கு நேர் மோதி படுகொலை செய்ய முடியாது என்பதால், டிரைவராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
பழைய குற்றவழக்கில் போலீசார் தன்னை கைது செய்ய முடிவு செய்திருப்பதால், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு கார் டிரைவராக வேலையில் சேர்ந்துள்ளார்.. அதுவும், முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் உதவியுடன் இந்த பணிக்கு சேர்ந்திருக்கிறார். கார்த்திக் தான் திருந்தி வாழ்வது போல் நடித்து, பிறகு வக்கீல் வெங்கடேசனை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிகிறது. முகம், தலையில் கொடூரமாக வெட்டியிருக்கிறார். அப்போது கத்தியை உருவியும் வெளியே எடுக்க முடியாததால், முகத்திலேயே செருகிவிட்டு கார்த்திக் சென்றதாக தெரிகிறது.
உண்மையிலேயே இந்த கொலை நிலப்பிரச்சனைக்கு நடந்ததா? கட்சி பதவிக்கு நடந்ததா? போட்டி பொறாமையால் நடந்ததா தெரியவில்லை.. கார்த்திக் கிடைத்தால்தான் உண்மை தெரியவரும்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம்












Click it and Unblock the Notifications