எதார்த்தமானவர்.. ஈகோ இல்லாதவர்.. மாரிமுத்து மரணம் அதிர்ச்சி தருகிறது... கருணாஸ்
சென்னை: எதார்த்தமான நடிகர் பன்முக திறமை கொண்டவர் அவரது மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் கருணாஸ். இயக்குநராகவும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், சின்னத்திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மாரிமுத்து பல ஆண்டுகாலமாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் என்ற சின்னத்திரை சீரியல் மூலம் பலரது இல்லங்களிலும் இல்லத்தரசிகளின் நெஞ்சங்களிலும் நுழைந்தவர். பிரபலமடைந்த வேகத்திலே திடீரென மரணமடைந்து விட்டார்.

56 வயதான மாரிமுத்துவின் மரணச் செய்தியை கேட்டு பலரும் நம்பவில்லை. வதந்தியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர். சமீப காலங்களில் திரை பிரபலங்கள் மரணமடைந்து விட்டதாக பல வதந்திகள் வெளியாகி வருவதால் மாரிமுத்துவின் மரணமும் வதந்தியாகத்தான் இருக்கும் என்று அவரது நண்பர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அது உண்மைதான் என்று காலை 10 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. அவரது மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கருணாஸ் அதிர்ச்சியுடன் பேசியுள்ளார். அவருடன் கொம்பன் படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார் கருணாஸ். மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பரியேறும் பெருமாள் படத்தில் பேசப்பட்டது. எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பார்த்த நடிகர்களில் எதார்த்தமான நடிகர். பன்முகத்தன்மை கொண்டவர் மாரிமுத்து. இயக்குநராக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். இயக்குநர்கள் சொன்னதைக் கேட்டு எதார்த்தமாக நடிப்பார்.

புதிய இயக்குநர்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அவர்களை தனியாக அழைத்துப்போய் சொல்லிக்கொடுப்பார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கருணாஸ் கூறினார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications