என் படத்தை யாரும் பார்க்கலைனா தற்கொலை செய்துக்குவேன்.. கண்ணீர் மல்க வீடியோ போட்ட நடிகர் மாயம்
சென்னை: தற்கொலை செய்ய போகிறேன் என தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எல்.வி.சுரேஷ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூ போன்ற காதல் என்ற படத்தை இயக்கி தயாரித்தவர் எல்.வி.சுரேஷ். இவர் இந்த படத்தில் நடிக்கவும் செய்தார். ஆனால் இது சரியாக போகவில்லை. இதனால் தான் கடனில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இந்த படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்ட சுரேஷ் தற்போது மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் LVS Entertainment ஆகும். சுரஷ் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். சினிமா மீது இவருக்கு இருந்த ஆசையால் பூ போன்ற காதல் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தை எடுக்க ரூ 5 லட்சம் கடன் பெற்றிருந்தாராம் சுரேஷ். தற்போது கடன் பிரச்சினை கழுத்தை நெரிக்கிறது.
இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய தியேட்டருக்கு சென்றவருக்கு அதிர்ச்சி. அங்கு எண்ணி 5 பேர் மட்டுமே படம் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த சுரேஷின் இதயமே நொறுங்கிவிட்டது போல் இருந்ததால் அழுதார். 20 டிக்கெட் கூட விற்பனையாகவில்லை.
இப்படியே போனால் தன்னால் உயிர் வாழ முடியாது. எனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி என்றார். இந்த வீடியோ அதிகமாக பகிர்ந்து எனக்கு உதவி செய்திட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் இவர் மாயமானதால் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இவர் டி.ராஜேந்தர் ரசிகர் என்றும் சொல்லப்படுகிறது. சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலை இதுதான் என்றும் திரைத்துறையும் ரசிகர்களும் சிறுபட்ஜெட் படங்களைப் புறக்கணிக்காமல் ஆதரவு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தனது மனைவி அனிதா பெயரில் அனிதா சுரேஷ் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications