எதையுமே எதிர்பார்க்கமாட்டார்.. ரொம்ப நல்ல மனிதர்.. மதன் பாபு மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்
சென்னை: புற்றுநோயால் நடிகர் மதன் பாபு இன்று காலமானார். அவருக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் விக்ரமனுடன் நடிகர் மதன் பாபு 3 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் தான் மதன் பாபு நல்ல மனிதர். எதையும் எதிர்பார்க்க மாட்டார். பட்ஜெட் படம் என்றாலும் பண்ணி கொடுப்பார். ரொம்ப நல்ல மனிதர். அவரது மறைவு திரையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று இயக்குநர் விக்ரமன் மனம் கலங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மதன் பாப் என்ற மதன் பாபு. 100க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார்.
தமிழ் சினிமாவில் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். குறிப்பாக நடிகர் கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்பிபிஎஸ்,விஜயின் பரண்ட்ஸ், நடிகர் அஜித் குமாரின் வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் மதன் பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் மதன் பாபு இன்று மாலை 5 மணிக்கு காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். நாளை உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
மதன்பாபு மரணம் பற்றி இயக்குநர் விக்ரமன் ‛ஒன் இந்தியா' தமிழுடன் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக இயக்குநர் விக்ரமன், ‛‛என் படத்தில் 3 படத்தில் அவர் நடித்துள்ளார். பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரியமான தோழி ஆகிய 3 திரைப்படங்களில் நடித்து இருந்தார். நல்ல நகைச்சுவை நடிகர். நல்ல நகைச்சுவை கொண்டவர். அடிப்படையில் இசை கலைஞர். நல்ல மியூசிக் அறிவு கொண்டவர்.
நானும் அவரும், பூவே உனக்காக படத்தில் ‛மச்சினிச்சி வர நேரம் மண் மணக்குது' பாடலில் டைரக்டராக நடித்து இருப்பார். சூட்டிங்கின்போது ராஜா சார் பாடல்கள் பற்றி பேசுவோம். பிரியமான தோழி சூட்டிங்கின்போது ஊட்டியில் தங்கியிருந்தோம். 2 நாள் வந்தார் என்று நினைக்கிறேன். அப்போதும் ராஜா சார் பாடல்கள் பற்றி பேசினோம். பால சந்தர் சார் தான் அவரை அறிமுகப்படுத்தி உள்ளார். பாலசந்தர் சார் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
ரொம்ப நல்ல மனிதர். மரியாதை கொண்டவர். டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட். சின்சியராக இருப்பார். டே அண்ட் நைட் நடிப்பார். எதையும் எதிர்பார்க்கமாட்டார். பட்ஜெட் படம் சார் என்றாலும் பண்ணிவிடுவார். உன்னை நினைத்து படத்தில் கூட 2 சீன் அவரை வைத்து எடுத்தேன். ஆனால் அந்த காட்சியை தூக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது.
அற்புதமான மனிதர். நல்ல மனிதரை இழந்துள்ளோம். இது திரையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. ஏன் மதன் பாபு இப்போதெல்லாம் நடிக்கவில்லை என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் எனக்கு தெரிகிறது. அவருக்கு கேன்சர் இருந்து உள்ளது என்று'' என்று தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications