"ஊசியே ஊசி போட்டுக்குது பாரு".. கொரோனா தடுப்பூசி போடும் போது மனோபாலாவை கலாய்த்த விவேக்!
சென்னை: ஊசியே ஊசி போட்டுக்குது பாரு என தன்னுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மனோபாலாவை விவேக் கிண்டல் செய்த சம்பவம் கண்ணீருடன் நினைவுக்கூரத்தக்கது.
Recommended Video
நடிகர் விவேக்கின் சிறந்த நண்பர்களுள் ஒருவர் இயக்குநரும் நடிகருமான மனோபாலா. இருவரும் ஏராளமான படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளனர்.
எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன் என்ற காமெடியில் இருவரும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு நேற்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டது.

கருத்துகள்
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குறித்த நினைவுகளை திரைத்துறையினர் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் மனோபாலா விவேக் குறித்து சில கருத்துகளை முன்வைத்தார்.

தடுப்பூசி
கடந்த வியாழக்கிழமை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருடன் தானும் ஊசி போட்டுக் கொண்டதாக மனோபாலா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், விவேக் இறந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.

நகைச்சுவை
இருவரும் சேர்ந்து நடித்த எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன் என்ற காமெடி இன்று வரை நம்பர் 1 காமெடியாக இருந்து வருகிறது. நேற்றைய தினம் நானும் அவருடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அப்போது அவர் நகைச்சுவை செய்தார்.

நம்ப மறுக்கிறது
எனக்கு ஊசி போடும் போது ஒரு ஊசியே ஊசி போட்டுக்குது பாரு என என்னை கிண்டல் செய்தார். அப்படிப்பட்டவர் இன்று இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. அப்துல் கலாம் ஐயா சொன்னதால் அவர் மரம் நடுகிறார் என்பது மட்டும்தான் உங்களுக்கு தெரியும்.

ஜாக்கிரதை
ஆனால் புயல் என்றால் உடனே களத்தில் இருந்து உதவிகளை செய்வார். அவரது மகன் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்து வந்தவர். தடுப்பூசி போட வரிசையில் நின்றவர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டோமே என சும்மா இருந்து விடாதீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என விவேக் அறிவுறுத்தினார் என்றார் மனோபாலா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications