மணப்பாக்கத்தில் கனவு இல்லம் கட்டிய மாரிமுத்து.. கடைசி வரை புதுவீட்டில் காலடி வைக்காமல் போய்விட்டாரே
சென்னை: பார்த்து பார்த்து தான் கட்டிய வீட்டிற்குள் அவர் கடைசி வரை செல்ல முடியாமல் போனதே என அவருடைய குடும்பத்தினர் மிகவும் வருத்தமாக தெரிவித்துள்ளார்கள்.
பிரபல இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து. இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகர் கேரக்டரில் ஏய் இந்தாம்மா என கூறி அனைவரையும் மிரள வைத்தவர். இப்படி ஒரு பெண்ணடிமைத்தனம் கொண்ட கேரக்ட்ரா என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
தனது கேரக்டர், டயலாக், உடல் மொழி, முக பாவனை இவைதான் மாரிமுத்துவின் சொத்து. இந்த எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டது. இவருடைய இறப்பு சின்னத்திரை கலைஞர்களுக்கு பேரிழப்பாகியுள்ளது. எதிரில் இருக்கும் நடிகர்களும் இப்படி பேச வேண்டும், அப்படி பேச வேண்டும் என கற்றுக் கொடுப்பாராம்.
இவர் அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 1994 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனது. 27 ஆண்டுகளாக பல இடங்களில் வாடகை வீட்டில் தான் வசித்தோம். இப்போது நான் சொந்த வீடு கனவு இல்லம் வாங்கியுள்ளேன். சொந்த வீடு என்பது எல்லோருக்கும ஒரு கனவு.
வெளியூரில் இருந்து சென்னையில் வந்து வாழ்பவர்களின் பெரும் கனவு சொந்த வீடு. என் கனவும் நிறைவேறிவிட்டது. இப்ப நான் ஒரு சொந்த வீடு, ஒரு பெரிய வீடு, கனவு இல்லம் வாங்கி இருக்கேன். மணப்பாக்கம் பகுதியில் வாங்கியுள்ளோம். என் மனைவியின் செல்ல பெயர் மலர், அந்த பெயரைத்தான் இந்த வீட்டிற்கு வைக்க போகிறோம்.
இந்த வீட்டின் பிளானை வீட்டில் ஒட்டி வைத்துள்ளேன். இதை பார்த்துவிட்டு சில மாற்றங்களை என்ஜீனியரிடம் சொல்வேன் என கூறியிருந்தார். இப்படி பார்த்து பார்த்து கட்டி வரும் கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைக்காமலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது, மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த காலத்தில் அவர் பட்ட கஷ்டத்திற்கு தற்போது விடிவு பிறந்து நல்ல நிலையில் இருந்தார். எப்போதும் பிஸியாகவே ஷூட்டிங், டப்பிங் என இருந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications